Tamilnadu
”சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும் கலைஞரின் நூற்றாண்டு விழா”.. கே.பாலகிருஷ்ணன் ஆவேச பேச்சு!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறையும், 13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 13 முறை வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்து நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா ஒரு வருடத்திற்குக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது.
அதன் ஒருபகுதியாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஜூன் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.க தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் தலைவர் கலைஞர் போல் யாருமில்லை. அரைவேக்காடு ஆளுநருக்குக் கலைஞரின் அறிவில் அரை சதவீதம் கூட இல்லை.
எந்த ஒரு கட்சியும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பார்கள்.நாட்டிற்கு ஒரு பிரச்சனை வரும் போது அப்பிரச்சனையை விடப் பதவி முக்கியமல்ல என எண்ணியவர் கலைஞர். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டைச் சட்ட பாதுகாப்போடு கொடுத்தவர் கலைஞர் அருந்ததிய மக்களுக்கு 3% இட ஒதுக்கீட்டைக் கொடுத்தவர் கலைஞர்.
இன்று சனாதனத்தை அரியணை ஏற்ற நினைக்கிறார்கள். கலைஞருக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும் விழாவாக உள்ளது. அன்று தேசம் தலைவர் கலைஞரை எதிர்பார்த்தது. அதுபோன்று இன்று சனாதனத்தை வீழ்த்த தலைவர் தளபதி அவர்களை எதிர்பார்க்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!