Tamilnadu
லாரி மீது மோதிய கார்.. 39 வயதில் உயிரிழந்த மலையாள நகைச்சுவை நடிகர்: அதிர்ச்சி சம்பவம்!
கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கொல்லம் சுதி. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஸ்டார் மேஜிக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். குறிப்பாக நடிகர் ஜெகதீஷைப் போல நடித்ததன் மூலம் இவரை சினிமா வாய்ப்பு தேடி வந்தது.
2015ம் ஆண்டு அஜ்மல் இயக்கத்தில் வெளிவந்த கந்தாரி படத்தில் அறிமுகமானர். அதன் பிறகு வாய்ப்புகள் குவிந்தது. 'ஸ்வர்க்கத்திலே காட்டுறும்பு கொல்ல','எஸ்கேப்','குட்டநாடன் மார்பப்பா', 'கட்டப்பனையிலேயே ரித்விக் ரோஷன்' உள்ளிட்ட பாடங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
இந்த படங்களை அடுத்துப் பல படங்களிலும் வாய்ப்புகள் இவருக்குக் குவிந்து வந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருச்சூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது இவரது கார் சரக்கு லாரி மீது இன்று அதிகாலை மோதியுள்ளது. இதில் கொல்லம் சுதி மற்றும் காரில் வந்த பினு அடிமாலி, உல்லாஸ் மற்றும் மகேஷ் ஆகியோரும் காயமடைந்தனர். இதையடுத்து இவர்கள் மீட்கப்பட்டு கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்குச் சிகிச்சை பலனின்றி கொல்லம் சுதி உயிரிழந்தார்.
இந்த இறப்புச் செய்தியை அடுத்து உயிரிழந்த கொல்லம் சுதி ரசிகர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் இறங்கள் தெரிவித்து வருகின்றனர். சாலை விபத்தில் 39 வயது இளம் நடிகர் உயிரிழந்தது மலையாள சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!