Tamilnadu

மீண்டும் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. 2 தேதிகளில் பள்ளிகள் திறப்பு: முழு அப்டேட் இங்கே!

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று மதுரை, கடலூர், சென்னை, திருநெல்வேலி, வேலூர், கரூர், தூத்துக்குடி, நாகை, உள்ளிட்ட 18 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

இந்நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பள்ளிகள் திறப்பு தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையை அடுத்து 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் நலன் கருதி மூன்றாவது முறையாகப் பள்ளி திறப்பு தேதியில் தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. முதலில் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு ஜூன் 5ம் தேதிக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஜூன் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக இரண்டு தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”பன்னாட்டு நிறுவனங்களில் இன்று தமிழர்கள் இருக்கக் காரணம் கலைஞர்”: வைரமுத்து பெருமிதம்!