Tamilnadu
”இந்த மண்ணில் கடைசித் தமிழர் உள்ளவரை முத்தமிழறிஞர் கலைஞர் போற்றப்படுவார்”.. செல்வப்பெருந்தகை வாழ்த்து!
சமூகநீதிக்காகவும், சாமான்யர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய அரும்பணிகள் அனைத்தும் இந்த மண்ணில் கடைசித் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும். பாராட்டப்படும் என காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்து முற்போக்கு கொள்கைகளாலும் தனது முழுவதும் போராடி, ஆட்சியில் அமர்ந்திருந்த நாட்களில் உன்னத நோக்கங்கங்களை நிலைநாட்டிய நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நாளை (03.06.2023) நுாற்றாண்டு பிறந்தநாள்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் கொண்ட கொள்கையாலும், சரித்திர சாதனைகளாலும், கலாச்சார நினைவுகளோடும் என்றென்றும் நம்மோடு வாழ்பவர். தமிழ்நாட்டில் அவர் ஆட்சியில் இருந்த போது, எந்தத் திட்டம் செயல்படுத்தினாலும் அதன் நோக்கம் சமூகநீதியாகவே இருக்கும். சமூகநீதிச் சிந்தனையையொட்டிய அவருடைய திட்டங்கள் அனைத்தும் வரலாற்று சாதனைகள் ஆகும்.
சமூகநீதிக்காகவும், சாமான்யர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் அனைத்தும் இந்த மண்ணில் கடைசித் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும். பாராட்டப்படும். வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழி வாழ, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு வாழ, தமிழ் கலாச்சாரம் வாழ வாழ்ந்த முத்தமிழறிஞரின் விழாவினை போற்றிப் புகழ்பாடுவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!