Tamilnadu
”நானும் 10ம் வகுப்பு fail.. ஆனா இப்போது கலெக்டர்”: மாணவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய திருப்பூர் ஆட்சியர்!
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கிறிஸ்துராஜ். இவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் முதலுதவி சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது, சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளிடம் முறையாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். இப்படி ஒவ்வொரு நோயாளிகளிடம் அவர்கள் குறைகளை ஆட்சியர் கேட்டறிந்தார்.
அப்போது அனீஸ் என்ற பள்ளி மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைப்பார்த்த ஆட்சியர் ஏன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதற்கு அவர்கள், 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவன் தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
இதையடுத்து ஆட்சியர் கிறிஸ்துராஜ் மாணவனிடம், "நானும் 10ம் வகுப்பில் ஃபெயில் ஆகியிருக்கிறேன். பின்னர் நன்றாகப் படித்து இப்போது மாவட்ட ஆட்சியராக உள்ளேன். என்னால் முடிந்தது என்றால் உன்னாலும் முடியும்.
நீ நன்றாகப் படித்து 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். அப்போது எனக்கு தொலைபேசியில் அழைத்துக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்படாதே. நன்றாகப் படி" என அன்போடு அறிவுரை வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் இந்த குணத்தைப்பார்த்த அங்கிருந்த மாணவனின் பெற்றோர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!