Tamilnadu
எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய தமிழன்.. மீனவ இளைஞரின் வெற்றிக்கதை !
இயற்கையின் படைப்பில் என்றுமே அலுக்காத இரண்டு விஷயங்கள் கடலும், மலையும். இரண்டுமே அதன் அசாதாரணத்திற்காகவே நம்மை மிகவும்ஆச்சர்யப்பட வைக்கும். அப்படி கடலின் ஆழத்தையும், மலையின் உச்சியையும் ஒரு சேர வென்றெடுத்த ஒரு சாதனைத் தமிழன் குறித்த அறிமுகம் தான் இது.
தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்து, எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய அந்தத் தமிழன் ராஜசேகர் (எ) குட்டி. எவரெஸ்ட் சிகரம் - மலையேற்ற வீரர்கள் மட்டுமில்லாமல், சாதாரண மனிதர்களுக்கும் அந்த சிகரத்தை அடைவது ஒரு கனவு. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். ஆனால், கனவை நிஜமாக்க தேவைப்படும் உழைப்பும், உறுதியும் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அப்படி ஒரு மனிதர்தான் குட்டி.
தமிழ்நாட்டின் மீனவ கடற்கரை கிராமத்தின் 27 வயது இளைஞர்தான் குட்டி. அலை சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர். பிட்னெஸ், அலை சறுக்கு பயிற்சியாளராக இருந்தவருக்கு திடீரென மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.
ஒரு வருட காலமாக அதற்கான பயிற்சிகள் எடுத்து, 6 மலை உச்சிகளில் ஏறி தன்னை எவரெஸ்ட் கனவுக்காக தயார்படுத்திக்கொண்டார். 3 மாத உடற்பயிற்சி, பனி குளிரைத் தாங்க மணாலி, சோலங், நேபாள் பகுதிகளில் தங்கி உடலையும், மனதையும் உறுதிப்படுத்திக்கொண்ட குட்டி, ஏப்ரல் 13ம் தேதி எவரெஸ்ட் மலையின் Base Campல் பயணத்தை தொடங்கி, 8850 மீட்டர் உயரத்தை மே 19ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அடைந்து தனது கனவை நிஜமாக்கினார்.
இந்த பயணத்தில் ஏகப்பட்ட தடைகள், தட்பவெப்ப சூழ்நிலைகள், மன உறுதியைக் குலைக்கும் சம்பவங்கள் என பலவற்றைத் தாண்டி வெற்றியை அடைந்துள்ளார். இதன் மிக முக்கியமானது தமிழ்நாட்டில் இருந்து சென்று முதல்முறையாக தமிழர் ஒருவர் அடைந்த வெற்றி என்பதே. குட்டியின் இந்த கனவுக்கு ஸ்பான்ஸர் Kyn Powered by PRO. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டமான Hyper Local என்னும் கான்செப்ட்டில் உருவாகியுள்ளது இந்த Kyn செயலி. நம் உள்ளூர் கதாநாயகர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேலும் ஊக்குவித்து, கொண்டாட வருகிறது Kyn.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!