Tamilnadu
ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் அடையாளம்.. தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
கடந்த டிசம்பர் 8ம் தேதி இறுதி வாதம் நடைபெற்றது. பிறகு தேதி குறிப்பிடப்பாடல் தீர்ப்பை நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பில், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு இணைந்தது ஜல்லிக்கட்டு. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். கலாச்சார ரீதியா விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அப்படியே தலையிடுவதாக இருந்தாலும் இதில் சட்டசபை முடிவு எடுத்த நிலையில் நாங்கள் அதில் தலையிட முடியாது. தமிழ்நாடு கொண்டு வந்த சட்டம் செல்லும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!