Tamilnadu
“குடிநீர் தொட்டி அமைக்கும் பணியில் SP.வேலுமணி முறைகேடு” - அ.தி.மு.க ஆட்சியில் நடந்த மற்றொரு ஊழல் அம்பலம்!
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கோவை மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்டுள்ள குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டம் ரூ.202.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பணியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கார் கோவைப்புதூர் பாலாஜி நகர் பகுதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கொள்ளளவு தொட்டி கடந்த 2015-2016 வருடத்தில் கட்டப்பட்டது.
இந்த மேல்நிலை தொட்டி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்டு அதை செயல்பாட்டிற்கு கொண்டுவரும் போது தொட்டியில் நீர்தேக்கம் செய்யப்பட்டு அது பல இடங்களில் நீர்கசிவு ஏற்பட்டு தரமற்ற வகையில் உள்ளதால் பயன்பாடின்றி காட்சி பொருளாக அங்கே காணப்படுவதாகிறது. மேலும் முறையாக பணிகளை செய்யாமல் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழலில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் உள்ளது.
எனவே அவர் மீது உரிய விசாரணைக்கு பரிந்துறை செய்ய மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தார். இது குறித்து அவர் கூறும் போது முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ள நிலையில், தற்போது குடிநீர் வடிகால் வாரியம் மூலமும் அவர் ஊழல் செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!