Tamilnadu

விஷச்சாராயத்தை விற்பனை செய்த வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கைது.. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலிஸ்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த சங்கர் (வயது 50). தரணிவேல் (50). மண்ணாங்கட்டி (47). சந்திரன் (65). சுரேஷ் (65). மண்ணாங்கட்டி (55) ஆகியோர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர். இதில் அனைவரும் வாந்தி மயக்கம் ஆன நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சங்கர் என்பவர் நேற்று இரவு உயிரிழந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், தரணிவேல் ஆகிய 2 பெரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த வசந்தா, க/பெ.ராஜா (வயது 50), திரு.செல்வம், த/பெ. செல்வம் (வயது 35), திரு.மாரியப்பன், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு.வள்ளியப்பன் (வயது 65) மற்றும் திருமதி.சந்திரா, க/பெ. வள்ளியப்பன் (வயது 60) ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி.மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் வகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே செங்கல்பட்டு எரி சாராயத்தால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

6 பிரிவின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்த போலிஸார் முக்கிய குற்றவாளியான அமாவாசை என்பவரை கைது செய்தனர். மேலும் கூட்டாளிகளான சந்துரு, வேலு, ராஜேஷ் மற்றும் நரேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாஜகவின் ஓ.பி.சி அணி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் விஜயகுமாரிடம் தற்பொழுது காவல்துறையின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கபட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க தெரிவித்துள்ளது.

Also Read: கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் - நிவாரணம் அறிவிப்பு !