Tamilnadu

திடீரென தனியாக கழன்று சென்ற 8 ரயில் பெட்டிகள்.. இன்று காலை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கும் மற்றும் செங்கல்பட்டுக்கும் மின்சார ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரையும் மின்சார ரயில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் செங்கல்பட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்றது.

பிறகு பயணிகள் ரயில் நிலையத்தில் இறங்கிய பின் மீண்டும் ரயில் புறப்பட்டது. அப்போது திடீரென 8 பெட்டிகள் தனியாகவும், 4 பெட்டிகள் தனியாகம் கழன்றது. இதை உடனே கவனித்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார். ரயில் பெட்டிகள் தனியாகக் கழன்றதால் அதிலிருந்து பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உடன் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு ரயில் பெட்டிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் காலையிலேயே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

பின்னர் 1 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் பேட்டிகள் இணைக்கப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இன்று வேலை நாள் என்பதால் பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்பவர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, பிரச்சனை சரிசெய்யப்பட்ட பிறகு தற்போது ரயில் சேவை மீண்டும் சீராக இயக்கப்பட்டு வருகிறது.

Also Read: 50%-க்கும் குறைவாக பதிவாகும் முன்பதிவு.. வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை !