Tamilnadu

வேட்பு மனுவில் பொய்யான தகவல்.. சிக்கப்போகும் பழனிசாமி: அதிரடி முடிவெடுத்த மத்திய குற்றப்பிரிவு போலிஸ்!

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போது, வேட்பு மனுவில் சொத்து விபரம் குறித்து தவறான தகவலை எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ளதாகத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று சேலம் மத்திய குற்றப்பிரிவு போலிஸாருக்கு உத்தரவிட்டது. மேலும் மே 26 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் கூறியது.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வேட்பு மனுவில் சொத்து விபரம் குறித்து தவறான தகவல் அளித்த எடப்பாடி பழனிச்சாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக எடப்பாடி பழனிச்சாமியின் வங்கிக் கணக்குகள் சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி செலுத்துவதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை திரட்டியுள்ளது.. தற்போது அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலிஸார் முடிவு செய்துள்ளனர்.

மேலும், புகார் தரமான மிலானி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரிக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: திடீரென தனியாக கழன்று சென்ற 8 ரயில் பெட்டிகள்.. இன்று காலை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?