Tamilnadu
பள்ளி ஆசிரியர் ஓட்டி சென்ற கார்.. லோடு டெம்போவில் மோதியதில் மற்றொரு பள்ளி ஆசிரியர் பலி; 3 பேர் படுகாயம் !
கரூர் நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார். இவர் தான் சொந்தமாக வைத்திருக்கும் காரில் அடிக்கடி வெளியில் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று பிற்பகலில் காரில் கரூர் - ஈரோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்துள்ளார் விஜயகுமார்.
இதனால் கார் தாறு மாறாக ஓடியுள்ளது. இதில் சாலையில் சென்ற மூன்று இரண்டு சக்கர வாகனங்கள் மீது மோதியது. தொடர்ந்து எதிரே நின்ற வெங்காயம் லோடு ஏற்றிச் சென்ற சிறிய டெம்போ வாகனத்தின் மீதும் மோதியுள்ளது. கார் சரமாரியாக மோதியதில் டெம்போ கவிழ்ந்து அதில் இருந்த வெங்காயம் அனைத்தும் சாலையில் சிதறியது.
அதோடு மட்டும் நிற்காமல் கார் மேலும் வேகமாக இயங்கவே, சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீதும் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சாலையோரத்தில் இருந்த பிரதாப், மதியழகன், முத்துகுமார், இந்திராகாந்தி ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இந்த கோர விபத்து குறித்து ஆம்புலன்சுக்கும், போலீசுக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இதில் பலத்த காயமடைந்த பிரதாப் என்ற வாலிபர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய ஆசிரியர் விஜயகுமாருக்கும் இதில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த பிரதாப், கரூர் ஆத்தூரில் அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி ஆசிரியர் ஒருவர் ஓட்டி சென்ற கார், நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானதில் மற்றொரு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?