Tamilnadu
“என் பணியை திறம்பட செய்வேன்..” : அமைச்சராக பொறுப்பேற்ற TRB.ராஜாவின் முதல் பேட்டி - நெகிழ்ச்சி சம்பவம் !
தமிழ்நாடு அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக புதிதாக அறிவிக்கப்பட்ட, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு அமைச்சர்களும் துறை சார்ந்த அதிகாரிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கட்டளையை ஏற்று அவரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப திராவிட மாடல் ஆட்சியின் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்துடன் தமிழகத்தை தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக அமைந்திட எல்லா விதத்திலும் என் பணியை திறம்பட செய்வேன் என்றார்.
மேலும், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைய வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் துறையில் அதிகப்படியான நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொண்டுள்ளார் முதலீடுகள் அதிகமாக வர வேண்டும் என்றும் கடந்த ஆட்சி காலங்களில் பல்வேறு பின்னடைவுகளை கண்ட தமிழ்நாட்டை முதலமைச்சர் மீண்டும் முன்னேற்றிக் கொண்டு வந்துள்ளார்.
பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் தொடங்குவதற்கு முதலில் வரும் மாநிலம் தமிழ்நாடு தான். ஏனென்றால் இங்கு உள்ள கட்டமைப்பும் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியும் அவரின் தொலைநோக்கு பார்வையும் தான் என்றார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு