Tamilnadu
வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து.. சாலையில் தூக்கியெறியப்பட்ட இளம்பெண்.. இறுதியில் நடந்த பயங்கரம் !
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த கௌசல்யா(20) என்ற இளம்பெண், சேலம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ்சில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் பேருந்தில் பணிக்கு சென்று திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக தனியார் பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது, பேருந்தின் முன்புறம் படிக்கட்டு அருகே நின்று வந்துள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி சந்திரா தியேட்டர் என்ற பகுதியில் உள்ள சாலை வளைவு பகுதியில் பேருந்து வேகமாக திரும்பியது.
அப்போது கௌசல்யா நிலை தடுமாறி பேருந்தில் இருந்து வெளியே விழுந்தார். சாலையோரம் ஜல்லிக்கற்கள் அதிகம் இருந்த நிலையில், கற்கள் மீது விழுந்த நிலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கௌசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கௌசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கவுசல்யாவின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
கௌசல்யா தனியார் பேருந்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தனியார் பேருந்தில் இருந்து இளம்பெண் கௌசல்யா கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!