Tamilnadu
12 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?.. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்ன முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்துப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சில மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வு வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 12ம் வகுப்புத் தேர்வு வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்துக் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "மே 7ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி குறித்து முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !