Tamilnadu
சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்த அடுத்தநாளே: பட்ஜெட் வாக்குறுதியை நிறைவேற்ற தொடங்கிய திராவிட மாடல் அரசு!
தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதை அடுத்து பள்ளிக் கல்வித்துறையில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகமே போற்றும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டு வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து நடந்து முடிந்துள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின்போது 2023-24ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2023-24ம் கல்வியாண்டில் அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதில், மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய வேண்டும், பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரித்து மற்றும் கல்வியில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!