Tamilnadu
“சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி..” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில், சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலோ நாத் சிங், தமிழ்நாடு விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடரின் சென்னை இணை ஒருங்கிணைப்பாளர் சேகர் ஜே மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சரின் அறிவுறுத்தல் பேரில் ஒடிசாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பைக்கு நமது மாநிலத்தில் இருந்து துறை சார்ந்தவர்கள் சென்று பார்த்தோம். அப்போது தான் தமிழகத்தில் இதுபோல ஹாக்கி போட்டிகள் நடத்த வேண்டும் என திட்டமிட்டோம்.
ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆடவருக்கான ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் 16 ஆண்டுகளுக்கு பிறகு இங்கே நடைபெறுகிறது என்பதை தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுத்துறை மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே முதலமைச்சர் சார்பில் இந்த போட்டிகளை நேரம் இருந்தால் துவக்கி வைப்பார். இந்த ஹாக்கி தொடருக்காக இதற்கு பின்னர் தான் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை போன்று இதனை தமிழ்நாடு மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல தனி கவனம் செலுத்துவோம் என பேசிய அவர், தமிழ்நாடு வீரர்களுக்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த தொடரில் இருக்கமா என்ற கேள்விக்கு, தமிழக வீரர்கள் விளையாடுவது, ஹாக்கி இந்தியா தேர்வுக் குழுவின் முடிவை பொறுத்தே அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!