Tamilnadu
Home Again புதிய திட்டம்: மாற்றுத்திறனாளிகள் மானியக் கோரிக்கையில் 14 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் 14 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
1.மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000 நபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.120 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
2. உயர்கல்வி பயிலும்1000 பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தலா ரூ.14 ஆயிரம் மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி ரூ.140 லட்சம் செலவில் வாங்கப்படும்.
3. ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 500 பயனாளிகளுக்கு ரூ.140 லட்சம் நீதி ஒதுக்கீடு செய்யப்படும்.
4. உள்ளாட்சி அமைப்புகளில் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு செய்யப்படும்.
5. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை உயர்த்தி கூடுதலாக ரூ.200 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
6. செவி மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி அளிக்க ரூ.150 லட்சம் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.
7. மாற்றுத்திறனாளிகளின் சேவையில் ஈடுபட்டுள்ள அரசு நிதியுதவி பெறும் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிப்பூதியம் உயர்த்தி வழங்குவதற்கு ரூ.534.78 லட்சம் நிதி ஒதுக்கீடு.
8. அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 326 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளைப் பராமரிக்க ஏதுவாக மாதந்தோறும் ரூ.4500 மதிப்பூதியத்தில் பராமரிப்பு உதவியாளர்களை நியமனம் செய்ய ரூ. 176.04 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
9. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் பத்து அரசு மறுவாழ்வு இல்லங்களில் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, தங்கியுள்ள 592 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் உணவூட்டு மானியத்தினை ரூ.42 லிருந்து ரூ.100ஆக உயர்த்தி வழங்க ஆண்டுக்கு ரூ.124.00 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
10. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் பொருட்டு மீண்டும் இல்லம் (Home Again) திட்டம் அறிமுகம். முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
11. மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவதற்கு அந்தந்தத் துறைகள் மூலம் பணியிடங்களை நிர்ணயம் செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.
12. மாற்றுத்தின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை இருமடங்காக உயர்த்தி 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.700 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
13. மனநலம் சார் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 150 பயனாளிகள் பயன்பெறும் வகையில் நான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மூன்று இல்லங்கள் கட்டுவதற்கு ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்படும்.
14. அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இணை உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!