Tamilnadu
கலைஞர் பிறந்தநாள் அன்று பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல்.. பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
1. 17,312 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.25.70 கோடி செலவில் புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும்.
2. சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டம், உள்ளகப் புகார்க்குழுக்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும் ரூ.50 லட்சம் செலவினத்தில் இணையதள முகப்பு மற்றும் கைப்பேசி செயலிகள் உருவாக்கப்படும்.
3. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் எந்திரம் வழங்கம் திட்டத்தின் கீர் நவீன உயர்ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.
4. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும்.
5. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியினை கண்காணித்து நிகழ்நேர பதிவு மேற்கொள்ள ஏதுவாக 18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடியில் திறன் கைப்பேசிகள் வழங்கப்படும்.
6. குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு ரூ.14.85 கோடி செலவில் வளர்ச்சிக் கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்படும்.
7. இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 700 குழந்தைகள் மையங்களுக்கு கற்றல் திறன்களை ஊக்கப்படுத்துவதற்கு எல்.இ.டி தொலைகாட்சி பெட்டிகள் ஒரு மையத்திற்கு ரூ.25 ஆயிரம் என ரூ.1.75 கோடியில் வழங்கப்படும்.
8. நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் 9,088 குழந்தைகளுக்கு ஸ்வெட்டர், தொப்பி, காலுறை வழங்குவதோடு 608 மையங்களுக்கு தரைவிரிப்பான்கள் ரூ.80 லட்சம் செலவில் வழங்கப்படும்.
9. குழந்தைகள் மையங்களில் சமையலுக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் எரிவாயு உருளைகள் அரசு மற்று கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்யப்படும்.
10. முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளன்று சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.
11.பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் குறித்த தரவுகளை சேமிக்கும் இணையதளம் நிறுவுதல், நிகழ்நேர கைப்பேசி செயலி மூலம் ஆய்வு மற்றும் கண்காணிப்பு ரூ.1 கோடியில் மேற்கொள்ளப்படும்.
12. குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள், மகளிர் காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நிபுணர்கள், சேவை வழங்குநர்கள் வாயிலாக மன ரீதியில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு உரிய பயிற்சிகள் தேவையின் அடிப்படையில் ரூ.1 கோடி செலவினத்தில் வழங்கப்படும்.
13. பாலியல் குற்றங்கள் அல்லாத பிற துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ரூ.50 லட்சம் நிதித் தொகுப்பு உருவாக்கப்படும்.
14. சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் 34 அரசு குழந்தைகள் இல்லங்களிலும் திறன் பலகைகள் (ஸ்மார்ட் போர்ட்) ரூ.55 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும்.
15. திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் ரூ.1.14 கோடி செலவினத்தில் அமைக்கப்படும்.
16. தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லம், சென்னை மாவட்டம், இராயபுரம் சிறுவருக்கான அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் தலா ரூ.7 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
17. சென்னை, சிறுமியருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம், திருநெல்வேலி, சென்னை மற்றும் மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் பணியாளர் குடியிருப்பு ரூ.10 கோடி செலவினத்தில் கட்டப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!