Tamilnadu
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - கலைஞர் நூற்றாண்டு முனையம் என பெயர்: ஜூனில் திறந்து வைக்கும் முதலமைச்சர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு 50 புதிய அறிபிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம் சர்வதேச தரத்திற்கு ரூ. 60 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.
திருவொற்றியூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை மேம்படுத்தப்படும்.
சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு அங்காடி வளாகம் ரூ. 33.35 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படும்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், மாதவரம் சரக்கு உந்து முனையத்தில்
உள் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 30.30 கோடி நிதியை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கும்.
சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி, வரதராஜபுரத்தில், ஒப்பந்தப் பேருந்துகள் நிறுத்துமிடம் ரூ. 29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
கிழக்குக் கடற்கரையில் நீலாங்கரை முதல் அக்கரை வரை, முதற்கட்டமாக சுமார் 5 கி.மீ நீளத்திற்கு மிதிவண்டிப்பாதை மற்றும் நடைபாதை, ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை, ரூ. 17 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மருத்துவ சிகிச்சை மையத்துடன் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினுள், 6 ஏக்கரில், ரூ. 8 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள அயனஞ்சேரி - மீனாட்சிபுரம் சாலையினை ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சென்னையிலுள்ள நான்கு மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்கள் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் அழகு படுத்தப்படும்.
சிறுசேரியில் அமைந்துள்ள 50 ஏக்கர் வன நிலத்தில், ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வனம் ஏற்படுத்தப்படும்.
சென்னை வெளிவட்டச் சாலையில் 4 உடற்பயிற்சிப் பூங்காக்கள் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதத்தில் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அர்ப்பணிக்கப்படும்.
சென்னைப் பெருநகரப் பகுதியில், மனைப்பிரிவுகளுக்கான திட்ட அனுமதி, இணைய வழியாக வழங்கப்படும்.
சென்னைப் பெருநகரப் பகுதியிலுள்ள பாரம்பரிய கட்டடங்களைப் (Heritage Buildings) பாதுகாப்பதற்காக மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைச் சான்றிதழ் வழங்கப்படும்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சலவைக் கூடத்தினை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்ளப்படும்.
இராயபுரம் மூலகொத்தளத்தில் ரூ.6 கோடியில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும்.
கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகள் ரூ.5 கோடியில் அழகுபடுத்தப்படும்.
சென்னையில் கொண்டித்தோப்பு பகுதியில் ரூ.10 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.
சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்கா ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னை தியாகராய நகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் ரூ.10 கோடியில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படும்.
வடசென்னை காசிமேட்டில் உள்ள கடற்கரைப் பகுதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும்.
திரு.வி.க நகர்பேருந்து நிலையம் ரூ.5 கோடியில் நவீனமயமாக்கப்படும்.
பெரும்பாக்கத்தில் ரூ.3.25 கோடியில் புதிய பூங்கா அமைக்கப்படும்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சலவைக்கூடத்தில் ரூ.10 கோடியில் மறுவளர்ச்சி மேற்கொள்ளப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!