Tamilnadu
சிறுபான்மையின மாணவர்களுக்கு விடுதிகள்.. சிறுபான்மை நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என்ன ?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் சிறுபான்மை நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
1.ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மை இனத்தைச் சார்ந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஏதுவாக ஒரு தையல் இயந்திரம் ரூ.6400 மதிப்பில் 2500 மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
2. சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை உதவித் தொகை ரூ.20,000-லிருந்து ரூ. 30,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் .
3. சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
4. சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விபத்து மரணத்திற்கான உதவித் தொகை ரூ.1,00,0007-லிருந்து ரூ.1,25,0007- ஆக உயர்த்தப்படும்.
5)சிறுபான்மையின மாணவர்களின் நலன் கருதி, சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 2 புதிய சிறுபாண்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் 81 இலட்சத்து ஆயிரம் ரூபாய் செலவில் துவங்கப்படும்.
6. தமிழகத்தில் உள்ள கிறித்தவர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தினர் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமான கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு 1 கோடி ரூபாய் செலவில் புதிதாக சுற்றுச்சுவர், பாதை மற்றும் புணரமைப்பு செய்யப்படும்.
7. சொந்தக் கட்டடத்தில் இயங்கும் சிறுபாண்மையினர் விடுதிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் சிறப்புப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
8.விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, சென்னை மாவட்டத்தில் உள்ள இராயப்பேட்டை சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கு 6 கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.
9. கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு முஸ்லீம் மகளிர் உதவி சங்கம் 2 இலட்சம் செலவில் புதிதாக துவங்கப்படும்.
10. கல்லூரி மாணவர்கள் மொழி,பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறு ஆகியவற்றின் புரிதல்களை பெற்றிடும் வகையில் கல்லூழி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலம் 1 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
11. அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் சிறுபான்மையினர் உரிமைகள் தினத்திற்கான தொகை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.2,000,7-லிருந்து ரூ.40,0007- ஆக உயர்த்தப்படும். இதற்கென 3 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
12. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வக்ஃப் டுசாத்துக்களை அளவை செய்வதற்காகவும் மற்றும் 11மண்டல அலுவலகங்களில் 1 கணினிகள் மற்றும் 11 ஸ்கேனர்களுடன் கூடிய நகல் எடுக்கும் இயந்திரங்கள் வாங்கவும் 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!