Tamilnadu

குமரிக்கு குடும்பத்தோடு சுற்றுலா வந்த கேரள வாலிபர்.. திடீரென மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு !

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை அடுத்துள்ளது நூறநாடு என்ற கிராமம். இங்கு பிரதீஷ் (32) என்ற இளைஞர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில், அந்த பகுதியில் இவர் வேலை செய்து வருகிறார்.

இந்த சூழலில் அந்த பகுதியில் உள்ளவர்களோடு சேர்ந்து சுற்றுலாவுக்கு செல்ல முடிவெடுத்தார். அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து ஒரு அமைத்து 52 பேருடன் பிரதீஷ் குடும்பத்தோடு சுற்றுலா பயணம் மேற்கொண்டார்.

அப்போது பழனி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள், நேற்று இரவு கன்னியாகுமரி வந்தனர். அங்கே இருக்கும் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு பேருந்தில் வந்த அனைவரும் அறை எடுத்து தங்கினர். அப்போது அங்கே இருக்கும் கிளைமேட் காரணமாகி பிரதீஷ் மது அருந்த எண்ணியுள்ளார். எனவே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

சுற்றுலா வந்த இடத்தில் கணவர் இப்படி மது அருந்தியதால் மனைவிக்கு கோபம் வந்துள்ளது. இதனால் அவர் சண்டையிட்டுள்ளார். எனவே அது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியுள்ளது. மேலும் இந்த வாக்குவாதத்தில் கோபம் அடைந்த பிரதிஷ் தான் தங்கி இருந்த லாட்ஜுக்கு மேல் தளத்திற்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் அவரது மனைவி சத்தம் போட்டு அனைவரையும் அழைக்கவே அங்கு மக்கள் கூட்டம் கூடியது. தொடர்ந்து இதுகுறித்து அந்த பகுதி காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார், பிரதிஷுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனை பெரிதாக கருதாத பிரதீஷ் குதிப்பதிலே கவனம் செலுத்தினார். இந்த இடைப்பட்ட நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் அவரை நெருங்கவே, அதனை கண்ட அவர் குதித்து விடுவதாக மிரட்டினார்.

இதைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் குழந்தைகளும், உடன் சுற்றுலா வந்தவர்களும் கெஞ்சி கேட்டும் அந்த வாலிபர் கீழே இறங்க மறுத்துவிட்டார் இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாகவும் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் போக்கு காட்டிய கேரளா வாலிபர் பிரதீஷ் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் காயமடைந்த அவரை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு உடல் நலம் சரியானதும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். ஏனெனில் தற்கொலை முயற்சி என்பது சட்டப்படி தவறாகும். கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த நபர் ஒருவர், மது போதையில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக தங்கியிருந்த லாட்ஜின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் !

Also Read: காதலர் என நினைத்து தம்பதியை தாக்கிய இந்துத்துவ கும்பல்..காதலர் தினத்தன்று ஹரியானாவில் நடந்த கொடுமை !