Tamilnadu

சென்னை வந்த பிரதமர் மோடி.. வரவேற்ற போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த புத்தகம் என்ன?

ஹைதராபாத்தில் இன்று வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்து விட்டு பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு மதியம் பிரதமர் மோடி வருகை தந்தார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பிரதமர் மோடிக்கு Gandhi Travel in TamilNadu என்ற புத்தகத்தைப் பரிசளித்தார்.

இந்த புத்தகத்தில் தமிழ்நாடு பயணம் குறித்து மகாத்மா காந்தி தனது அனுபவங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் புதிய முனையத்தைச் சுற்றிப்பார்த்தனர்.

பின்னர் அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையைக் கொடியசைத்து பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Also Read: ”எங்கு சென்றாலும் தோனி - CSK அணிக்குதான் கூட்டம் அதிகம் இருக்கும்”: மும்பை அணி பயிற்சியாளர் ஓபன் டாக்!