Tamilnadu
தொடரும் மரணம்.. திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி.. 24 வயது ஜிம் Master உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம் !
அண்மைக்காலமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போதே பலரும் உயிரிழந்து வரும் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டும் கன்னட சூப்பர் ஸ்டாராக கருதப்படும் புனித் ராஜ்குமாரும் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அதன்பிறகு இளைஞர்கள், நடு வயதுடையோர், ஜிம் மாஸ்டர் என பலரும் உயிரிழந்து வரும் செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் கூட மத்திய பிரதேசத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்து ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு கடந்த மாதம் கூட சென்னை ஆவடியில் உள்ள 24 வயதுடைய ஆகாஷ் என்ற இளைஞர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.
ஆகாஷ், அதிக அளவிலான ஸ்டெராய்டு ஊசி எடுத்துக்கொண்டதால், அவரது 2 கிட்னிகளும் செயலிழந்தது அவரது மரணத்துக்கு காரணம் என தெரியவந்தது. தொடர்ந்து இதுபோல் இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது திருவள்ளூரிலும் இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும்போது உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் . 24 வயதுடைய இவர், அதே பகுதியில் ஜிம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இது போன்ற பயிற்சியாளர்கள் தினமும் பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆனால் அஜித் கடந்த 3 மாத காலமாக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தால், அஜித்தை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வெளியாவது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அதிகபடியான சுமைகளை தூக்கி உடற்பயிற்சி மேற்கோள்வது ஆபத்தானது என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!