Tamilnadu
யமஹா நிறுவனம் நடத்திய Mileage Challenge: 1 லிட்டர் பெட்ரோலில் 128 கிலோ மீட்டர் ஓட்டி அசத்திய கோவை இளைஞர்!
இருசக்கர வாகனங்களை வாங்க நினைப்பவர்கள் முதலில் அந்த வாகனத்தின் விலை எவ்வளவு என்று பார்ப்பதை விட அந்த வாகனம் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதைத்தான் தெரிந்து கொள்ள நினைப்பார்கள். நாம் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கியவர்களிடம் முதலில் கேட்கும் கேள்வியே 'வண்டி எவ்வளவு மைலேஜ் தருது' என்பதாகத்தான் இருக்கும். இந்த மைலேஜ்தான் எந்த நிறுவனத்தின் வண்டிக்கும் பெயர் எடுத்துக் கொடுக்கும்.
இந்நிலையில் யமஹா நிறுவனம் கோவையில் மைலேஜ் சேலஞ்ச் ஒன்றை நடத்தியுள்ளது. இதில் யமஹாவின் பேசினா, யமஹா ரே, ஸ்ட்ரீட் ரேலி ஆகிய மூன்று இருசக்கர வாகனங்களும் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்று சோதனை முயற்சி செய்துபார்த்தது.
இந்த சேலஞ்சில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் கொண்டு வந்த வாகனங்களை யமஹா நிறுவனத்தின் மெக்கானிக்குகள் சோதனை செய்த பிறகு சேலஞ்சில் பங்கேற்க அனுமதி கொடுத்தனர்.
இதில் கலந்து கொண்ட அனைவரது வாகனங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டது. இவர்கள் 30 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் கொடிசியா மையத்திற்கே திரும்பி வரவேண்டும். அப்போது வாகனம் எவ்வளவு மைலேஜ் கொடுத்தது என்பதைச் சோதனை செய்து பார்க்கவே இந்த சேலஞ்ச் நடத்தப்பட்டது.
இந்த சேலஞ்சில் அஷ்வின் குமார் என்ற இளைஞர் ஒரு லிட்டர் பெட்ரோலி 128 கிலோ மீட்டர் தூரம் சென்று முதல் பரிசை பெற்றுள்ளார். அடுத்து 122 கிலோமீட்டர் தூரம் சென்ற அருள்குமார் என்பவருக்கு இரண்டாவது பரிசும், 115 கிலோ மீட்டர் தூரம் சென்ற ரபிக் என்பவருக்கு மூன்றாவது பரிசும் வென்றனர்.
Also Read
-
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா?... பழனிசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ஆர்.காந்தி !
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !