Tamilnadu
பால்வளத்துறை மானிய கோரிக்கை.. அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டுள்ள 48 புதிய அறிவிப்புகள் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் 48 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களின் நலன் காக்க "கலைஞர் சங்க பணியாளர்கள் நல நிதி" உருவாக்கப்படும்.
பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால்பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 2 இலட்சம் புதிய கறவை மாடுகள் வாங்கப்படும்.
ஆவின் பண்ணைகளில் ரூ.30 கோடியில் பால் பாக்கெட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்.
ரூ. 25 கோடியில் 10 ஏக்கர் பரப்பளவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன ஆலை அமைக்கப்படும்.
ரூ. 4.52 கோடியில் நவீன தொழில்நுட்பங்களை அறிய 1 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
புதிய தொழில் நுட்பங்களை காட்சிப்படுத்தும் வண்ணம் தேசிய பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும்.
ஆவின் நுகர்வோர்களுக்கு e-Milk Card அறிமுகப்படுத்தப்படும். ஆவின் ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நீதி உருவாக்கப்படும்.
ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் பால் பண்ணையில் சாக்லேட் உற்பத்தி அலகு நிறுவப்படும். பால் உற்பத்தியாளர்களின் 5 லட்சம் கறவைகளுக்கு 50% மானியத்தில் காப்பீடு செய்யப்படும்.
ரூ.4 கோடியில் கள்ளக்குறிச்சி மற்றும் இராணிப்பேட்டையில் பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் நிலையங்கள் நிறுவப்படும். ஈரோடு சத்தியமங்கலத்தில் பசுந்தீவன குச்சிகள் தயாரிக்கும் ஆலை ரூ.6.75 கோடியில் நிறுவப்படும்.
நீலகரியில் ஆவின் உறைவிந்து உற்பத்தி நிலையம் ரூ.4.46 கோடியில் மேம்படுத்தப்படும். தூய பால் உற்பத்தியை உறுதி செய்ய கிராமப்புற ஆய்வகங்கள் ரூ.8.75 கோடியில் மேம்படுத்தப்படும்.
சிறந்த பால்உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும். செயலி மற்றும் இணைய வழியில் ஆவின் பொருட்கள் விற்பனை தொடங்கப்படும்.
திருநெல்வேலி, சேலம் பயிற்சி நிலையங்களில் மகளிர் தொழில்முனைவோர்களுக்காக ரூ.2.58 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாதவரத்தில் பால் பண்ணை பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!