Tamilnadu
ஆணழகன் போட்டிக்காக அதிகமாக ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்ட Gym Trainer: 2 கிட்னி செயலிழந்து உயிரிழப்பு!
சென்னை ஆவடி அடுத்த நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஆகாஷ். நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் (gym trainer ) பணியாற்றி வந்தார்.
மேலும், ஆகாஷ் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற வேண்டும் என கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்குப் பரிசோதித்தபோது, ஆகாஷ்க்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்தது தெரியவந்தது. . இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற ஆகாஷ் கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன், அதிக அளவு சீராய்டு ஊசியைப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இரண்டு கிட்னியும் செயல் இழந்து ஆகாஷ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !