Tamilnadu
TNPSC தேர்வில் முறைகேடு நடந்ததா?.. சட்டப்பேரவையில் அமைச்சர் PTR கூறிய விளக்கம் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் கூடியது.
பின்னர், பேரவையில் நேரமில்லா நேரத்தில் டி.என்.பி.எஸ்.பி குரூப் 4 மற்றும் தட்டச்சு தேர்வில் தேர்வு முடிவுகளில் குளறுபடி நடைபெற்றதாகச் சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அ.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர், தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாகத் தவறாகத் தனியார் மையம் விளம்பரம் வைத்துள்ளது. மேலும் இந்த பயிற்சி மையம் பல மாவட்டங்களில் தேர்வு மையங்கள் வைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. முறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட நிலையில், முதலமைச்சரின் ஆலோசனைப்படி தற்போது அரசு தேர்வாணையத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
7000 அரசு பணிகளுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். அதுவும் ஒரே நாளில் தேர்வு என்றால் பல்வேறு குளறுபடிகள் இருக்கச் செய்யும், இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தில் பல்வேறு மாற்றங்கள், குறிப்பாகத் தேர்வில் எழுதுவதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!