Tamilnadu
”மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையா இருக்கலாம்” : சபாநாயகர் பேச்சால் பேரவையில் எழுந்த சிரிப்பலை!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வாசித்தார். அப்போது வேளாண் நிதிநிலை அறிக்கை உரையின்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், "மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையா இருக்கலாம், தங்கம் சாம்பா சாப்பிட்டால் தங்கமாய் இருக்கலாம். இதை எல்லோரும் சாப்பிட வேண்டும்" என்றார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைப் பார்த்து லேசாகச் சிரித்தார். உடனடியாக சபாநாயகர் அப்பாவு "எல்லாருக்கும் கொடுங்கள், சாப்பிடத் தயாராக இருக்காங்க" என சிரித்தபடியே கூறினார். இதைக்கேட்டு அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் புன்னகைத்து, அமைச்சரின் கருத்தை வரவேற்றனர். இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!