Tamilnadu
’சார்’ பார்சல் கட்ட லேட்டாகும்.. உணவக உரிமையாளரின் ஆள்காட்டி விரலைக் கடித்து கால்வாயில் துப்பிய நபர்!
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் கமுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகம் முன்பு உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் முஷ்டகுறிச்சி பகுதியைச் சேர்ந்த வழிவிட்டான் என்பவர் கதிரேசன் உணவகத்தில் பார்சல் சாப்பாடு வாங்க வந்துள்ளார். அப்போது ஏற்கனவே பார்சல் சாப்பாடு வாங்க சிலர் காத்துக் கொண்டிருந்ததால், வழிவிட்டானிடம் சாப்பாடு கட்டித்தர சில நிமிடங்கள் ஆகும் என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வழிவிட்டான் உணவகத்திலிருந்த கரண்டியை எடுத்து கதிரேசன் தலையில் பலமாக அடித்துள்ளார். மேலும் கதிரேசனின் இடது கையை பிடித்து அவரது ஆள்காட்டி விரலைத் துண்டாகக் கடித்துள்ளார். பின்னர் துண்டான அவரது விரலை உணவகம் அருகே இருந்த கால்வாயில் துப்பிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் கதிரேசனை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்க அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த வழிவிட்டானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர். பார்சல் கட்டுவதற்குத் தாமதமானதால் உணவக உரிமையாளரின் விரலை ஒருவர் கடித்துத் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!