Tamilnadu
“கைது செய்தால் ரசிகர்கள் கொந்தளிப்பார்கள்”: நகையை கொள்ளையடித்த ரீல்ஸ் பிரபலம் -போலிசில் சிக்கியது எப்படி?
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ளது பெருங்களத்தூர். இங்குள்ள புத்தர் நகர் என்ற இடத்தில் வசித்து வரும் சபாபதி - மாலதி தம்பதியினர் தங்கள் வீட்டிலிருந்த 3 சவரன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரொக்கமும் காணவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீர்க்கங்காரனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தங்கள் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக சம்பவம் நடந்த இடத்தில சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சிசிடிவி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, அதில் இளம்பெண் ஒருவர் முகத்தில் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் சென்றது பதிவாகியிருந்தது.
அதனை சோதனை செய்தபோது, அந்த ஸ்கூட்டியில் நம்பர் பிளேட் இல்லாமல் அந்த பெண் வாகனத்தை ஓட்டி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்து சுமார் 47 சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த பெண் மண்ணிவாக்கம் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று விசாரித்தபோது, ஸ்கூட்டியில் வந்த பெண் பெயர் அனிஷ் குமாரி என்றும், அவர் ரீல்ஸ் செய்து பிரபலமானாவர் என்றும் தெரியவந்தது.
இவையெல்லாம் அறிந்த பின்னர் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றபோது, அங்கே அவர் புதிதாக ரீல்ஸ் செய்துகொண்டிருந்தார். இதையடுத்து அவரிடம் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் ஒரு ரீல்ஸ் பிரபலம் என்றும், தனக்கு இதன்மூலமே நல்ல வருமானம் வருவதாகவும், தான் ஏன் திருட வேண்டும் என்றும் திமிராக பேசியுள்ளார்.
இப்படி தொடர்ந்து தனது குற்றத்தை மறுத்து வந்த அனிஷ் குமாரி, போலீசார் அவரிடம் தக்க ஆதாரத்தை காட்டியபோது மிரண்டு போய் விட்டார். பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், தான் ரீல்ஸ் மூலம் பிரபலமானதால் வசதியாக வாழ எண்ணி திருடியதாக தெரிவித்தார். மேலும் திருடியதில் 10 ஆயிரத்தை 1 மணி நேரத்திலே செலவு செய்துவிட்டதாகவும், நகைகள் திருப்பி தருவதாகவும் கூறி, தனது வீட்டில் பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்த நகைகளை எடுத்து கொடுத்திருக்கிறார்.
இதனிடையே அவரை போலீசார் கைது செய்ய வந்திருப்பதை அறிந்ததும், தான் இப்போது ரீல்ஸ் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமாக இருப்பதாகவும், தன்னை கைது செய்தால் ரசிகர்கள் கொந்தளித்து விடுவதாகவும் கூறி மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதையடுத்து யாரும் உன்னை பார்த்ததில்லை என்று போலீசார் கூறியதையோடு அவரை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரிக்கையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாலையில் நின்றுகொண்டிருந்த 2 சக்கர வாகனத்தை திருடி OLX-ல் விற்றதும், அதற்காக இவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
ரீல்ஸ் மூலம் பிரபலமான பெண், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடியுள்ள சம்பவம் பலர் மத்தியிலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!