Tamilnadu
மூஞ்சிய உடைச்சுருவேன், வெறில இருக்கேன்.. ஐயப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல்: TTF VASAN மீது பாய்ந்த வழக்கு
கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 30 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
பைக்கிலே ஊர் ஊராக சுற்றி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருவார். மேலும் இவர் பைக் ரேசர் என்பதால் தனது பைக்கில் அதிவேகமாக செல்லுவது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். பப்ளிசிட்டிக்காக இவர் செய்யும் அட்ராசிட்டிகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிவேகமாக வாகனம் ஓட்டி பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக TTF வாசன் மீது கோவை போத்தனூர் போலிஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இப்படியே இவர் பல தொந்தரவுகளை ஏற்படுத்தி வந்தார்.
அதைத் தொடர்ந்து ஊடகத்தினரை மிரட்டும் விதத்தில் TTF வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்ததால் இதில் இருந்து தப்பிக்க பெங்களூரு நோக்கி இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற TTF வாசனை சூலூர் போலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதன்பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அதோடு பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இவரது செயல்பாடுகள் இருந்ததால் தொடர்ந்து இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது. இதனால் இவர் அடிக்கடி அபராதம் காட்டுவதோடு, ஜாமீனில் விடுவிக்கப்படுவார். அதுமட்டுமின்றி, சில இடங்களில் மன்னிப்பு கடிதமும் எழுதிக்கொடுத்துள்ளார்.
இப்படி தொடர்ந்து சிக்கலில் சிக்கி வரும் இவர், கடந்த ஜனவரி மாதம் நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு மாதம் கழித்து தற்போது யூடியூப் ஊடகவியலாலருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக இவர் மீது மீண்டும் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது பிரபல யூடியூப் ஊடகவியலாலரான ஐயப்பன் ராமசாமி ஒரு குரூப்புக்கு சாதகமாக பேசுவதற்கு பணம், பொருட்கள் வாங்கியதாக, மதன் ரவிச்சந்திரன் நடத்திய ‛ஸ்டிங்க் ஆபரேஷன்' வீடியோ வெளியானது. அதோடு இந்த வீடியோவில் ஐயப்பன் ராமசாமி, பெண்கள் குறித்தும் இழிவாக பேசியுள்ளார்.
இது வெளியாகி பலரும் ஐயப்பன் ராமசாமிக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். ஐயப்பன் ராமசாமி உட்பட மேலும் 3 ஊடகவியலாளர்கள் இந்த ஸ்டிங்க் ஆபரேஷனில் சிக்கினர்.
அந்த வகையில் ஐயப்பன் ராமசாமிக்கு TTF வாசன் மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‛கையில் சிக்கினால் மூஞ்சிய உடைப்பேன். எங்கு பார்த்தாலும் விடமாட்டேன்.. உனக்கு எல்லாம் மரியாதையே கிடையாது' என்று ஆத்திரத்தோடு பேசியிருந்தார். இந்த வீடியோவில் இணையதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், TTF வாசன் யூடியூப் ஊடகவியலாலரான ஐயப்பன் ராமசாமிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கோவை காரமடை போலிஸ் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தொடர்ந்து சிக்கலில் இருந்து வரும் TTF வாசன், தற்போது கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யபட்டுள்ளது.
முன்னதாக ஐயப்பன் ராமசாமி, TTF வாசனை பேட்டி எடுத்தார். அப்போது அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், பாதியிலேயே TTF வாசன் எழுந்து சென்றார். இதனால் இவரை நெட்டிசன்கள் கலாய்த்தது தள்ளினர். அதோடு இவரை பற்றி மீம்களும் உருவாக்கி கிண்டல் செய்து வந்தனர். இதன் காரணமாக தான் தற்போது TTF வாசன் இந்த வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?