Tamilnadu

“50,000 மாணவர்கள் +2 தேர்வு எழுதாதன் பின்னணி இதுதான்” : Data சொல்லும் ராஜீவ் காந்தி !

தமிழ்நாடு கல்வித்துறையில் சமீபகாலமாக பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகள் என்றாலே ஏதோ மரத்தடியில் இயங்கும், கல்வித்தரமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்ற மாயைகள் இப்போது உடைபடத் தொடங்கியுள்ளன.

அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு கல்லூரிகளில் ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் தமிழக அரசு இப்போது தனி அக்கறை காட்டி வருகிறது.

மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா, நான் முதல்வன், கல்வி பயிலாமல் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம், வீடு தேடி கல்வி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே நடந்த முதல் தேர்வில் 5.6% மாணவர்கள் எழுத வில்லை. 38,000 அரசுப் பள்ளி மாணாக்கர்களும், 8000 அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களும், 1000க்கும் மேற்பட்ட தனியார்ப் பள்ளி மாணாக்கர்களும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவில்லை என்றும் தெரியவந்தது.

இதனையடுத்து கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அன்றைய தினமே ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர்மொழித்தேர்வு நிறைவு பெற்ற பிறகு அன்றைய தினமே தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்க அறிவுறுத்தி உள்ளோம். மொழி தேர்வு எழுதா விட்டாலும் மாணவர்களைமற்ற தேர்வுகள் எழுதவைப்பதற்கான முயற்சி நடந்து வருகிருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களைத் தேர்வு எழுத வைக்கப் பெற்றோர்கள் கல்வித் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் மாணவர்கள் கண்டிப்பாகத் தேர்வை எழுதுவார்கள். தேர்வை எழுத தவறிய மாணவர்களை ஜூன் மாதம் நடைபெறும் துணைத் தேர்வை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் மாணவர்கள் தேர்வு எழுதாத விவகாரங்களில் அரசியல் செய்யும் நோக்கில் அதிமுக பாஜக கட்சியின் அரசின் மீது வீண்பழியை சுமத்தியுள்ளனர். கடந்த காலங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருந்துள்ளனர். ஆனால் இம்முறை தேர்வு எழுதாமல் இருந்த மாணவர்களையும் சேர்த்து தேர்வு எழுத வைத்துள்ளது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை.

இந்நிலையில் இதுகுறித்து தி.மு.க மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக இரா.ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரனா பேரிடரால் ஆல் பாஸ் செய்யப்பட்ட 10 வகுப்பு மாணவர்கள் தான் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்கள்!

இரண்டு ஆண்டு இடைவெளியில் பள்ளி கல்வித்துறை கற்றல் இடைவெளி குறைத்து இல்லம் தேடி கல்வி போன்ற பல புதுமையான திட்டங்களை அறிமுகம் செய்து பல பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைத்தது! மனச்சோர்வு, கற்ற இடைவெளி இதனால் கல்வி பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்கும், மாணவர்கள் பள்ளியினை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதற்கும் தான் பள்ளி கல்விதுறை இந்த ஆண்டு மாணவர்களின் வருகை பதிவேட்டில் இறுக்கம் (கெடுபிடி) காட்ட வில்லை!

அதனால் தான் அனைத்து மாணவர்களுக்கு ஹால்டிக்கட் கொடுக்கபட்டு பொதுத்தேர்வை எழுத அனுமதி கொடுத்தனர்! இதற்கு முன்னரும் ஆண்டுக்கு சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 40000 மாணவர்கள் தனிப்பட்ட காரணங்களால் ஆண்டின் இறுதி பொது தேர்வினை எழுதாமல் இருக்கின்றனர்!

அத்தகைய மாணவர்கள் ITI, பாலிடெக்னிக் போன்ற தொழில் கல்வி நிலையங்களுக்கும் செல்கின்றனர்! வெளிப்படை தன்மையோடும், ஏற்கனவே இடைநிற்றலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்காமலும் அவர்களையும் எப்படியாவது தேர்வு எழுத வைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு தான் பள்ளிகல்வி துறை செயல்பட்டு உள்ளது! இந்த செயல்பாடு மனதார பாராட்டப்பட வேண்டியது!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 50 ஆயிரம் மாணவர்கள் 12ம் வகுப்புத் தேர்வு எழுத வராதது ஏன்?.. அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!