Tamilnadu
நகை கடை வியாபாரியை குறிவைத்து கொள்ளை.. மர்ம கும்பல் போலிஸில் சிக்கியது எப்படி ? - வெளிவந்த பகீர் தகவல்!
சென்னை குறுக்குப்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி ராஜேஷ்குமார் கடந்த 13ஆம் தேதி, காஞ்சிபுரத்தில் உள்ள நகைக்கடைகளில் வியாபாரத்தை முடித்துவிட்டு, பேருந்து மூலம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அரும்பாக்கம் அருகே வழிப்பறிக் கொள்ளையர்கள் ராஜேஷ் குமாரின் வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு, அவர் வைத்திருந்த தங்க நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ராஜேஷ்குமார் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொள்ளை வழக்கில் ஆரிப் முஸ்தாக், அப்துல் ஹமீது, காலிஷா, ரஞ்சித், லோகேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், நகை வியாபாரி ராஜேஷ் குமாரை கடந்த ஒரு மாதமாக பின் தொடர்ந்து அவரை நடவடிக்கைகளை நோட்டமிட்டுள்ளதாகவும், பெரும்பாலும் சென்னையில் நகை வியாபாரிகள் கணக்கில் வராத தங்கத்தை கொண்டு சென்று, வியாபாரம் நடத்தி வருவதாகவும், இந்த நகைகளை கொள்ளை அடித்தால் போலிஸில் புகார் சொல்ல மாட்டார்கள் என்ற காரணத்தினால் ராஜேஷ் குமாரை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து அவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து கோயம்பேடு அரும்பாக்கம் சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் வைத்து அவரிடம் கொள்ளையடித்ததாகவும் போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ராஜேஷ் குமார் புகாரின் போது 430 கிராம் தங்க நகை மற்றும் 7 லட்ச ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போனதாக புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், குற்றவாளிகளிடம் ஒரு கிலோ 250 கிராம் தங்க நகைகள் மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ 650 கிராம் தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின் நகை காண உரிய ஆவணங்களை ராஜேஷ் குமார் அளித்த பின்பே அவரிடம் நகைகள் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!