Tamilnadu
திருச்சி இளைஞர் உயிரிழந்த விவகாரம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தமிழ்நாட்டில் 2663 பேருக்கு H3N2 காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையின் சார்பில் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.தமிழ்நாட்டில் 1586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2663 பேர் காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்களாகக் கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
சமுதாய மற்றும் சமூக விழாக்களில் பெரிய அளவில் கூட்டம் கூடும்போது முகக் கவசம், தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம். பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ வாகனங்கள் மூலம் நடமாடும் மற்றும் குட்கிராமங்களுக்கும் சென்று சிறப்புக் காய்ச்சல் முகாம்களை நடத்த வலியுறுத்தியுள்ளோம்.
திருச்சி தெப்பக்குளத்தைச் சேர்ந்த இளைஞர் அமைச்சர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே மிகவும் மோசமான உடல் நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று இறந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்புக்குக் காரணம் கொரோனா பதிப்பா இல்லை H3N2 வைரஸ் பதிப்பா என்பது குறித்து அறிய ஆய்வகத்திற்கு மாதிரிகளை அனுப்பி உள்ளோம். அதன் முடிவு வந்த பிறகு தெரியும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !