Tamilnadu
தூங்கிக்கொண்டிருந்த மருமகள் மீது டாய்லெட் ஆசிட்டை ஊற்றிய மாமியார்.. போலிஸ் கைது செய்து சிறையில் அடைப்பு!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் வசித்து வருபவர் முகேஷ்ராஜ். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கிருத்திகா (23) என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முகேஷ் அவிநாசி பகுதியில் வேலை செய்து வருகிறார் .
மேலும் முகேஷுடன் அவரது தயார் ஆண்டாள் (55) ஒரே வீட்டில் தங்கியுள்ளார். ஆண்டாளுக்கும் முகேஷின் மனைவி கிருத்திகா இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதாகவும், மருமகள் கிருத்திகா மீது சந்தேகப்பட்டு ஆண்டாள் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை கிருத்திகா தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து வந்த மாமியார் ஆண்டாள், கிருத்திகா முகத்தில் ஊற்றியுள்ளார்.
ஆசிட் பட்டத்தில் வலியால் துடித்தக்கொண்டிருந்த போது, கிருத்திகா வாயில் கொசு விரட்டி மருத்தையும் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிருத்திகாவை மீட்டுள்ளனர்.
இதில், முகம், கண், காது மற்றும் உடல் மீது ஆசிட் பட்டத்தில் பலத்தக் காயமடைந்த கிருத்திகாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவம் அறிந்து வந்த கடலூர் போலிஸார் மாமியார் ஆண்டாளை கைது செய்தனர்.
மேலும் மருத்துவமனைக்குச் சென்ற கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஆசிட் ஊற்றப்பட்டதால் கண் பார்வை கிருத்திகா இழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கிருத்திகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாமியார் ஆண்டாள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து, அவரது மகன் உட்பட குடும்பத்தினரை விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆண்டாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர் போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவ அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !