Tamilnadu
உதவி கேட்டு வந்த சிறுமி..பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக கவுன்சிலர்.. 24 மணிநேரத்தில் கைது செய்த போலிஸார்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் கயல்விழி (வயது 45). இவர் அதிமுகவில் நகர் அவை தலைவராக உள்ள கவுன்சிலர் சிகாமணி என்பவரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார்.
ஏழ்மை நிலை காரணமாக பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்த அந்த சிறுமி கயல்விழியிடம் தனது பெற்றோரின் வறுமை நிலையை கூறி தனக்கு ஏதும் உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு, கயல்விழி தனது முதலாளி உனக்கு உதவுவார் எனக் கூறி சிறுமியை கடந்த டிசம்பர் மாதம் அதிமுக கவுன்சிலர் சிகாமணியிடம் அழைத்து சென்றுள்ளார்.
சிறுமியை பார்த்த சிகாமணி அவருக்கு உதவுவதாக கூறி ஒரு விடுதிக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், தனது நண்பர்கள் ராஜா முகமது, பிரபாகரன் என்பவர்களையும் அழைத்துள்ளார். அவர்கள் மூவரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு கயல்விழி, அன்னலட்சுமி என்ற இரு பெண்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின்னரும் சிறுமிக்கு உதவுவதாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூற அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் அடுத்த 24 மணி நேரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக கவுன்சிலர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகம்மது ஆகியோரையும் உடந்தையாக இருந்த கயல்விழி, அன்னலட்சுமி ஆகிய 5 போரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!