Tamilnadu
"இந்தியாவையே காக்க வந்த சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்".. கவிஞர் வைரமுத்து புகழாரம்!
தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கவியரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சென்னை தெற்கு மாவட்ட சைதை கிழக்குப் பகுதி செயலாளர் 13 ஆவது மண்டல குழுத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார்.
இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கவிஞர் வைரமுத்து, பா.விஜய், மனுஷ்யபுத்திரன், சொற்கோ கருணாநிதி, இளைய கம்பன், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பேசிய கவிஞர் வைரமுத்து, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பு என்று பலரும் பல விதமாக அறியலாம். இந்தியாவில் மதவாத சக்திகளை, பிற்போக்கு வாதிகளை அழிக்க வந்தவர் என்று நினைக்கலாம். ஆனால் அவர் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவையே காக்க வந்த சக்தி.
என் வாழ்க்கை தான் இந்த உலகத்திற்கு நான் சொல்லவேண்டிய கருத்து என்று காந்தியடிகள் ஒருமுறை சொன்னார். அதேபோல் நேற்று பொதுக்கூட்டத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதியில் 85% நிறைவேற்றி இருக்கிறோம் என்று முதலமைச்சர் சொன்னார். இப்படி தைரியமாகச் சொன்னதை முழுவதும் செய்த முதலமைச்சரை நான் பார்த்தது இதுவே முதல்முறை.
ஒரு சூடான கத்தி எளிதில் எல்லாவற்றையும் கிழித்துச் செல்லும். அதேபோல கவிஞர்கள் அந்த கத்தியைச் சூடாக்கும் வேலையைச் செய்கிறார்கள். கலைஞர் அவர்களின் பிறந்தநாளுக்கு நூறு கவிஞர்களின் கவிதை தொகுப்புகள் தயாராகி உள்ளது. அதை வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியதே இன்னும் நிலுவை.
கவியரங்கத்தைப் பழிக்கும் இக்கால கவிஞர்கள் இந்த கவிஞர்களின் அருகில் அமர்ந்து கவிதைகளைப் படித்து கை தட்டு வாங்கி விடுவீர்களா? காசு கொடுத்து கை தட்டுகிற ஜாதி தமிழன் அல்ல. கவிதை அவ்வளவு எளிமையான காரியம் அல்ல.
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் கவிஞர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் வீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து அதில் தற்போது கையொப்பம் இடக் காத்திருக்கிறது. பின்னர் ஏன் கவிஞர்கள் அவரை கொண்டாடாமல் இருப்பார்களா என்ன?. இவரை கொண்டாடத்தான் செய்வார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!