Tamilnadu
திரைப்படத்தை விஞ்சும் கடத்தல் காட்சிகள்.. குஜராத் இளம் பெண் கடத்தல் வழக்கில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு!
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வினீத் என்ற இளைஞர் சென்னையில் பிரபல நிறுவத்தில் பயனியாற்றி வந்தார். அதே பகுதியில் வசித்து குஜராத்தைச் சேர்ந்த கிரூத்திகா படேல் என்பவரும் வினீதும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொண்டாதக் கூறப்படுகிறது. இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த வாரம் வினீத் வீட்டில் இருந்து கிருந்திகாவை கடத்திச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதனையடுத்து வினீத் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு, பெண்ணின் பெற்றோர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில், 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பெற்றோர் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில் கிருத்திகாவை ஆஜர்படுத்தகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வினீத் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதேவேளையில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் உறவினர்கள் தரப்பில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கிருத்திகா கடத்தல் வழக்கு முழுமையாக விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் யாருக்கும் ஜாமீன், முன்ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் வாதமிட்டனர். மேலும் கிருத்திகாவே குற்றவாளியாக இருக்க வாய்ப்பு உள்ளதால் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்றும் இளம்பெண்ணை கடத்திய போது திரைப்படக் காட்சிகளை போல அடுத்தடுத்து 5 கார்களில் கேரளா சென்று அங்கிருந்து குஜராத் சென்றுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
வழக்கு விவகரங்களை கேட்டறிந்த நீதிபதிகள், திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு கடத்தல் வழக்காக இருப்பதாகவும், ஆட்கொணர்வு மனு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வேறு எந்த முடிவு எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அரசு தரப்பு கோரிக்கை ஏற்று காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யவும்,வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!