Tamilnadu
“நிதி பிரச்சனை உள்ளது.. மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு ஒன்றிய அரசே காரணம்” : அமைச்சர் மா.சு விளக்கம்!
சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட சூரியம்பேட்டை பகுதியில் நேற்று காலை சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 5 பேர் தீக்காயமடைந்து, சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை 45 மாதத்தில் கட்டிமுடிக்கப்பட்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
2019ல் பணிகளை ஒன்றிய அமைச்சர் துவக்கிவைத்து விட்டு சென்றார்கள். 222.47ஏக்கர் நிலம் அன்றைக்கே தரப்பட்டு விட்டது, அதனை சுற்றுசுவர் அமைத்துள்ளார்கள். நிலம் பிரச்சனை இல்லை; நிதி பிரச்சனை தான் உள்ளது. தி.மு.க அரசு அமைந்த பிறகு உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நானும் செயலாளரும் முதல்வரின் வழிகாட்டுதல் படி, ஒன்றிய அமைச்சரை சந்திக்கும் போதும் வலியுறுத்தினோம். 50 மாணவர்கள் சேர்க்கைக்கு மதுரை தனியார் மருத்துவக்கல்லூரி, புதுவை ஜிப்மர் அல்லது கலைக்கல்லூரியில் சேர்க்க சொன்னார்கள்.
ஜிப்மர் வேறு மாநிலம், கலைக்கல்லூரியிலோ, தனியார் மருத்துவக்கல்லூரியிலோ சேர்த்தால் சரியாக இருக்காது, இராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் வளாகத்தில் முதலாமாண்டு 50 மாணவர்கள் இராண்டாம் ஆண்டிற்கு சேர்த்துள்ளார்கள். முதலாம் ஆண்டுக்கு 50மாணவர்கள் என 100 மாணவர்கள் மொத்தம் சேர்க்கப்பட்டார்கள்.
எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துவங்க வலியுறுத்தி வருகிறோம். அசாம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் மதுரையில் ஆரம்பிக்கும் போதே ஆரம்பிக்கும் போதே சொன்னார்கள். ஆனால். தமிழ்நாடு எய்ம்ஸ் தவிர மற்றவற்றிக்கு நிதி ஒதுக்குகிறார்கள். ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை இன்று பயன்பாட்டில் உள்ளது. மதுரை எய்ம்ஸ் ஜப்பான் நிதி உதவியுடன் பணிகள் நடைபெறும் என தெரிவித்து விட்டார்கள்.
நாங்கள் ஜப்பான் சென்றிருந்த போது ஜப்பான் ஜெய்கா குழுவினருடன் சந்தித்து பேசினோம். மதுரை எய்ம்ஸ் நிதி தருவதாக சொன்னீர்கள் அதனை விரைந்து கொடுங்கள் என்று சொன்னோம். அதற்கான டெண்டர் விட்டுள்ளோம். அந்த டெண்டர் ஏப்ரல் மாதத்தில் நிறுவனம் இறுதியாகும் என்றார்கள்.
எப்போது பணி துவங்கும் என்று கேட்டோம். 2024 இறுதியில் தான் மதுரை எய்ம்ஸ் பணிகள் துவங்கும், 2028ல் தான் நிறைவு பெறும் என்றார்கள். இது தான் மதுரை எய்ம்ஸ் உண்மை நிலவரம்.
உலகளவில் புற்று நோய் பாதிப்பு அச்சுறுத்தலான ஒன்று தான். புற்று நோய் பாதிப்பு சுற்றுசூழல், புகையிலையினால் வருகிறது ஆண்டுக்கு 70-80ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஜப்பானில் புற்று நோய் தொடர்பான அமர்வில் கலந்துக்கொண்டோம்.
மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து மிகவிரைவில் பதில் அனுப்பப்படும். அகில இந்திய கோட்டாவில் 6 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளது இது தொடர்பாக எழுத்து பூர்வமாகவும் நேரில் சந்தித்து கோரினோம் பதில் இன்னும் வரவில்லை” என்றும் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!