Tamilnadu
“1,144 பேர் கொத்தடிமை தொழிலாளர்கள் முறையில் இருந்து மீட்பு..” : தமிழ்நாடு அரசு எடுத்த உறுதியான நடவடிக்கை!
இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்தையே சுருக்கியுள்ளது. உலகில் எந்த பகுதியில் உள்ளவரையும் எளிதில் தொடர்புக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம்.
ஆனால், வாங்கிய சொற்ப பணத்திற்காக மனிதர்கள் கொத்தடிமையாக்கப்பட்டுவதை தடுக்க முடியவில்லை; கொத்தடிமையாக்கப்பட்டு துயரத்தில் உழல்கிற மனிதர்கள் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் படித்துக் கடந்துவிடுகிறோம்.
ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் தொடர்ந்து கொத்தடிமை முறையில் சிக்கிக்கொள்ள என்ன காரணம்; அதனைத் தடுக்க என்ன வழி என்ற விரிவான விவாதம் நமது சூழலில் இதுவரை உருவாகவில்லை.
அதுபோல விவாதம் பொதுத் தளத்தில் உருவாகும் போதுதான் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்கும் செயல்பாட்டு தீவிரமாக்கப்படும். அப்படி ஒரு விவாத சூழல் நம்மிடையே உருவாகவில்லை என்றால், இப்போதும் புதிய கொத்தடிமைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். கொத்தடிமைகள் முறையை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை அமெரிக்க தூதரக தலைமை அலுவலர் விர்சா பெர்கின்ஸ் கலந்துகொண்டு, கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்தார்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பினில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் மீட்க்கப்பட்ட முன்னாள் கொத்தடிமை தொழிலாளர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மீட்கப்பட்ட முன்னாள் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேசிய காவல் கண்காணிப்பாளர் பெரம்பலூர் மாவட்டம், வட மாநில குழந்தைகள் வறுமையின் பிடியில் இருக்கும் குழந்தைகளை குறி வைத்து கொத்தடிமைகளாக மாற்ற ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது.
கொத்தடிமை தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும், காவல்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தொடர்ந்து கொத்தடிமை முறைக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் மேடையில் பேசுகையில், “தமிழ்நாடு அரசு கொத்தடிமைத் தொழிலார் முறை ஒழிப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்புக்கு பிந்தைய மறுவாழ்வு மிகவும் முக்கியமானது” என தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 30,000 ரூபாய் மறுவாழ்வு தொகையாக வழங்குவதாகவும் கடந்த ஆண்டில் 1,144 பேர் கொத்தடிமை தொழிலாளர்கள் முறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாத தெரிவித்தார். நிகழ்வில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சகமனிதன் மீதான மானுட சுரண்டலாக சமூகத்தில் நிழலாடி கொண்டிருக்கும் கொத்தடிமை தொழில்முறை முற்றிலும் ஒழிக்க பட வேண்டியதாகும். இதை ஒழித்து தனிமனித உரிமைகளை காக்க அரசுக்கு துணைபுரிய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு நாளில் சமத்துவ சமூகம் அமைக்க உறுதியேற்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஊட்டச்சத்தாக விளங்கும் அரசு... : கருணை வடிவிலான வாக்குமூலம் - முரசொலி புகழாரம் !
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!