Tamilnadu

விவாகரத்து ஆன முஸ்லீம் பெண்களே டார்கெட்.. 5 பேரை ஏமாற்றி பைக், நகை மோசடி: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலிஸ்!

புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியயை சேர்ந்த 25 வயதாகும் இஸ்லாமிய பெண் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 2017ம் ஆண்டு தனக்கு திருமணம் நடந்து சில மாதங்களிலேயே விவாகரத்து ஆனதாகவும், இதனால் தனியார் முஸ்லிம் திருமண பதிவு செயலியில் இரண்டாம் திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்ட முகமது ஃபையஸ் என்கிற நபர் 10 நாட்களாக தன்னிடம் பேசி வந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். கடந்த 10 நாட்களுக்குப் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த முகமது ஃபையஸ் அதற்காக ஏற்பாடுகளை செய்யவேண்டும் என கூறி சென்னை ராயப்பேட்டை பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அதன் அடிப்படையில் சுமார் 50 சவரன் நகைகளுடன் ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலுக்கு வரவழைத்த முகமது ஃபைஸ் திருமண செலவிற்காக நகைகளை விற்று பணம் வாங்கி எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து நகைகள் அனைத்தையும் கொடுத்துவிட்டு தனியார் மாலில் காத்திருந்திருந்தாகவும் கூறியுள்ளார்.

பின்னர் வெகு நேரம் ஆகியும் முகமது வராத காரணத்தால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அண்ணாசாலை மாலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் செல்போன் சிக்னல்களையும் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து ஏற்கனவே உள்ள குற்றவாளிகளின் பட்டியலிலும் சந்தேகப்படும் படியான பட்டியலிலும் முகமது பாயசின் புகைப்படம் இல்லாததால் அவரை பிடிப்பதில் சிக்கல் நீடித்தது.

ஒரு மாத காலம் தொடர் விசாரணை நடத்தியதில் மோசடி ஈடுபட்ட முகமது ஃபையஸ் கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், நேற்று கோயம்புத்தூர் சென்ற அண்ணா சாலை போலிஸார் அங்கு ஒரு தனியார் லாட்ஜில் பதுங்கி இருந்த முகமது பையசை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஃபையஸ் நிரந்தரமான எந்த வேலையும் இல்லை. எனவே விவாகரத்தான இஸ்லாமிய பெண்கள் மற்றும் நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருக்கும் இஸ்லாமிய பெண்களை குறி வைத்து மோசடி ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, முஸ்லிம் திருமண பதிவு செயலியில் திருமணத்திற்கு பெண் தேடுவது போல் பதிவு செய்துவிட்டு, அதன் மூலம் தொடர்பு கொள்ளும் பெண்களை அணுகி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறை வாகி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது விசாரணை தெரிய வந்துள்ளது.

அதன்படியே சென்னைக்கு அந்த பெண்ணை வரவழைத்து மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே பாணியில் மதுரை வாணியம்பாடி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 5 முஸ்லிம் பெண்களை ஏமாற்றி இருப்பதாக தெரிவித்த அவர் இதுவரை போலிஸில் சிக்காமல் மோசடி ஈடுபட்டதையும் தெரிவித்துள்ளார். எனவே தான் முகமது ஃபையசை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் போலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மோசடி ஈடுபட்டு விலை உயர்ந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை முகமது வாங்கியுள்ளார். அவற்றை பறிமுதல் செய்த போலிஸார் புதுக்கோட்டையை சேர்ந்த பெண்ணிடம் இருந்து திருடி சென்ற நகையில் ஒரு பகுதியையும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் விட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு முகமது ஃபையசை போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: வெளிவந்த மோசடி.. 1.4 லட்சம் கோடி இழப்பு.. உலக பணக்காரர் வரிசையில் 7-வது இடத்துக்கு சரிந்த அதானி!