Tamilnadu
“நான் சொன்னது பொய்..” - காஞ்சிபுரம் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம் !
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு நேரத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் நேற்று காவல்துறையில் கண்ணீருடன் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வைத்து நடந்ததாக கூறி, அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிர படுத்தினர்.
தொடர்ந்து சாலவாக்கம் போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் M.சுதாகர், சம்பவ இடத்திற்கும் சென்று பார்வையிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அந்த பெண்ணின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது. இதையடுத்து அவரிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அந்த பெண் போலி புகார் கொடுத்துள்ளதும், அவரது காதலன் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால் அவரை சிக்கவைக்க இவ்வாறு செய்ததாகவும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் M.சுதாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 4 பேர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இளம்பெண் ஒருவர் புகாரளித்தார். இதுகுறித்து விசாரிக்கையில், அந்த பெண் பொய் புகார் அளித்துள்ளது தெரியவந்தது.
மேலும் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் மலையன்குளம் பகுதியைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இவ்வாறு தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் நடத்ததாக சொல்லப்படும் இடத்தில் அவர், தனது காதலனை மட்டுமே சந்தித்தார். மற்றபடி அவர் கூறியவாறு, அவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை. தனது காதலனை சிக்க வைக்க, அந்த இளம்பெண் பொய் புகார் கொடுத்ததும், அவர் காவல்துறையிடம் நாடகமாடியதும் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அம்பலமானது" என்றார்.
Also Read
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!