Tamilnadu
“சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறிக்குமா?” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
ராஜகோபுரம், சுற்றுப்பிராகாரம், கருங்கல் பதிக்கும் பணிகள், மின் பணிகள் நந்தவனம் சீரமைத்தல் முதலான பணிகளை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “கோயில் கும்பாபிஷேகத்திற்கு உண்டான திருப்பணிகள் அடுத்த எட்டு மாதங்களுக்குள்ளாக முடிக்க நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
திமுக ஆட்சியில் தான் உபயதாரர்கள் மனமுவந்து தரும் தொகை முழுமையாக திருக்கோவிலுக்கு செய்யப்படும் என நம்பிக்கை வந்துள்ளது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, திருக்கோயில்களுக்கு உபயதாரர்கள் மூலமாக 600 கோடி ரூபாய் வரை நன்கொடை வந்துள்ளது.” எனத் தெரிவித்தார்.
பின்னர் சீமான் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா?. எல்லாருக்கும் கை இருக்கு.. இந்த பதிலே அவருக்கு போது! எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னையில் கலைஞரின் நினைவாக மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்க பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் பலரும் கலந்துக்கொண்டு சிலை அமைப்பது தொடர்பாக ஆதரவு கருத்தைத் தெரிவித்தனர்.
மேலும் அரசியல் கட்சியினருக்கும் கருத்து சுதந்திரத்திரன் அடிப்படையில் கருத்துகளை வழங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அதன்பேரில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார். சீமானின் அநாகரிகமான பேச்சுக்கு ஆரம்பத்தில் இருந்தே கரும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக ஆரோக்கியமான கருத்தோ அல்லது எதிர்க்கருத்தோ தெரிவிப்பதற்கு பதிலாக வன்முறையைத் தூண்டும் வகையில் கலைஞரின் பேனா சிலை வந்தால் உடைப்பேன் என சீமான் கூறினார். சீமானின் இந்த பேச்சுக்கு அவையிலேயே கரும் கண்டனம் எழுந்தது. மேலும் சீமானுக்கு பல்வேறு தரப்பினருக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!