Tamilnadu
10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: Practical முதல் தேர்வு முடிவு தேதி வரை.. அதிகாரபூர்வ முழு விபரம்இதோ !
ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. எனினும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.
இந்த பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெரும் மாணவர்களே தங்கள் மேற்படிப்பை தொடர இயலும். இது அவர்களுக்கு ஒரு சோதனை கட்டம். எனவே இதற்காக மாணவர்கள் இரவும் பகலும் கண்விழித்து படிப்பர். மேலும் இந்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் தீவிர பயிற்சியும் கொடுப்பர்.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த தேர்வின் 2022 - 2023-ம் ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனவும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இதில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் சமூக அறிவியல் வரையிலான பாடத்திற்கான தேர்வு தேதி, இதோ :-
11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் அவரவர் பிரிவு பாடம் வரையிலான தேர்வு தேதி, இதோ :-
12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் முதல் அவரவர் பிரிவு பாடம் வரையிலான தேர்வு தேதி, இதோ :-
இந்த நிலையில் இந்த பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், இதற்கான ஆயத்தப் பணிகளின் நிலை தொடர்பாக இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில், தேர்வுத் துறை சார்பில் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துறை சார்ந்த இயக்குநர்கள், அனைத்து முதன்மை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளரை சந்தித்த அமைச்சர் தேர்வு முடிவுகள் தேதி குறித்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், "11 மற்றும் 12-ம் வகுப்பு 2 மாணவர்களுக்கு, முன்கூட்டியே பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிட பட்டிருந்தது.
தற்போது எழுத்துத் தேர்வு தேதிக்கும் செய்முறை தேர்வு தேதிக்கும் நாட்கள் குறைவாக இருப்பதால் சில நாட்கள் முன் கூட்டியே செய்முறை தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 10,11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.
மாணவர்கள் தேர்வுக்கு தாமதமில்லாமல் வந்து செல்ல பேருந்து வசதிகள், வகுப்பறையில் தண்ணீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்த சொல்லி உள்ளோம். ஜனவரி 30 ,31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் தனித் தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். திட்டமிட்ட படி சரியான நேரத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிப்படும். அதன்படி 12-ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதியும், 11-ம் வகுப்பிற்கு மே 19ம் தேதியும், 10-ம் வகுப்பிற்கு மே 17-ம் தேதியும் முடிவுகள் வெளியிடப்படும்" என்றார்.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!