Tamilnadu
“அறநிலையத் துறை விவகாரம்: பாஜக சொல்றது சின்னபுள்ளத்தனமா இருக்கு” - அண்ணாமலையை வெளுத்து வாங்கிய சுகிசிவம்!
மூத்த ஆன்மிக சொற்பொழிவாளரான சுகிசிவம், 'சன் நியூஸ்' தொலைக்காட்சி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-
செய்தியாளர் :- தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறையை ஒழிப்பது தான் என்னுடைய முதல் பணியாக இருக்கும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறி வருகிறாரே, அந்த
விமர்சனம் பற்றிய உங்களுடைய கருத்து என்ன என்று தெரிவியுங்கள்!
சுசிசிவம்:- அவரது கனவுக்கு நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை. அதைமுதலில் சொல்லிவிடுகிறேன். இப்போது என் மனதில் தோன்றிய உண்மையை சொல்லப் போகிறேன். அத்தை பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள் என்று சொன்னால், அத்தைக்கு மீசை முளைத்துவிட்டால் சித்தப்பா ஆகிவிடுவார்.
அப்புறம் சித்தப்பா பெண்ணை எப்படி நான் கல்யாணம் பண்ணுவேன் என்று ஒருவன் கேட்டால், அது எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்குமோ அவ்வளவு இருக்குமோ, குழந்தைத் தனமாக இருக்கிறது அவர் சொல்கிற வார்த்தை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... என்பதே ற்பனையின் உச்சம். திருப்பி நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பாண்டிச்சேரியில் இப்போது கூட்டணியில் யார் இருக்கிறார்கள்? பாண்டிச்சேரி திருநள்ளாறு கோவில் யார் கண்ட்ரோலில் இருக்கிறது? இவ்வளவு வீரம் பேசறவங்க கூட்டணியிலதான் இருக்காங்க.
பாண்டிச்சேரிக்கு போய் உடனே ரங்கசாமி அவர்கள் இனிமேல் இந்துக்களுடைய கோவில் இந்துக்களுக்கே என்று விட்டுக்கொடுத்துவிட்டு, திருநள்ளாறு கோவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்று ஒரு அறிக்கை விடுங்களேன்! உங்கள்லட்சியம் நிறைவேறுமே!
சரி! உங்கள் ஆட்சிதானே கர்நாடகாவில் நடக்கிறது? கர்நாட காவில் எச்.ஆர்.என்.சி. ஆக்ட் இருக்கா, இல்லையா, கர்நாடகா வில் ஆபிசர்ஸ், கோவில் எக்ஸிக் யூட்டிவ் ஆபிசர்களாக இருக்கிறார் களா? இல்லையா? இப்ப உங் களுக்கு ரொம்ப ஸ்ட்ரெய்ட்டா, ஆனஸ்டி என்று இருக்குமானால் ஒரே பாலிசிதான் எல்லா இடத்திலேயும் இருக்க வேண்டும்.
பெங்ளூருவில், கர்நாடகாவில இந்து அறநிலையத் துறை என்ற ஒன்று இருக்கிறபோது, பாண்டிச்சேரியிலும் இந்து அறநிலைய அதிகாரிகள் இருக்கிற போது, அங்கே போய் போராட்டம் நடத்துங்களேன்! உங்க கட்சி தானே ஆட்சியிலே இருக்கு! எங்கேயுமே இல்லாத இடத்துல உட்கார்ந்து கொண்டு, நான் முதலில் அதுலதான் கையெத்துப் போடுவேன் என்று சொன்னால், இதே சட்டம் பெங்களூரில் இருக்கலாம்.
இதேசட்டம் பாண்டிச்சேரியில் இருக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் இருக்கக் கூடாது அப்படீன்னு சொன்னால், லாஜிக் இடிக்க வில்லையா? இந்த இந்து அறநிலையத்துறை எப்போது உண்டானது? எதனால் உண்டானது? இதை முன் மொழிந்தவர்கள் யார் என்று வரலாறைசரியாகபடித்திருந்தால், இன்றைக்கு அப்படி நாம் பேச முடியாது! இந்து அறநிலையத் துறையில் அரசு தலையிடக் கூடாது.
அப்படீன்னு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், முதல் கேள்வி அதை யாரிடத்தில் கொடுப்பது? இப்படி இருக்கிற கோவில்களில் அரசு ஒரு ஜாயிண்ட் கமிஷனர், அடிஷனல் கமிஷனர் அப்படி ஒவ்வொரு ரேங்ல கோவிலை நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலை யாரிடம் திருப்பி கொடுக்கப் போகிறீர்கள்?
கோவில் குருக்களிடமா? இல்லாட்டி அந்த கோவிலில் இருக்கும் சிப்பந்திகளிடமா? இல்லாட்டி அந்த ஊர்ல இருக்கிற பணக்காரங்ககிட்டயா? இல்லை யார் யார் நன்கொடை கொடுத்தார்கள் என்று பார்த்து, அவங்களை ஒரு கமிட்டியாகப்போட்டு திருப்பி கொடுக்கப் போகிறீர்களா? நம்ம எதையுமே, வாய்க்கு வந்தபடிபேசுவது என்பது சுலபம்.
ஆனால், அதை நடைமுறைப் படுத்தும் போது, இந்த கோவிலை யார் நிர்வகிக்கப் போகிறார்கள், அப்படீன்னு இருக்கிறது. நல்லா கவனியுங்க. சொத்தை முதல்முதலாக தனியாருக்கு மாற்றிக் கொடுத்தவர்கள் ஆத்திகர்களேயொழிய நாத்திகர்கள் இல்லை. நல்லா கவனிக்கவும் கோவிலுக்கு என்று ரொம்ப பக்தியோடு நன் கொடைக்கு கொடுத்த நிலங்களை, இனாம் நிலங்களை மற்றவர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது யார் என்று, ஒரு 200 வருஷம் ரெக்கார்டை எடுத்து இப்ப நீங்க ரீ-ட்ரேஸ் பண்ணுங்க! ஏன்னா நான் நெறைய வழக்குகளை படித்துப் பார்த்தபின்பு இந்த முடிவுக்கு வர்றேன்.
இந்த மிஸ்யூஸ் நடந்ததைத்தான் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் சட்டசபையில பேசினாார். நெறைய தவறுகள் நடந்த பிறகுதான் அரசு, கோவில் சொத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துல இந்த எண்ணம் உருவானது. அப்ப தவறே நடக்கலையா என்றால், தவறு நடந்தால் திருத்தணும்! தவறு நடந்தால் கண்டிக்கணும்! அத கோர்ட்டு விசாரிக்கிறதுக்கு இருக்கு! நீதிமன்றம் இருக்கு! மக்கள் மன்றம் இருக்கு. தவறுகளை நாம் சொல்லி வெளியில கொண்டுவரணும்! அதவிட்டுட்டு, மொத்தமாக கோவிலை விட்டு வெளியில போ அப்படீன்னு சொன்னா, இது முறையானது இல்லை. அதை யாருக்கும் திருப்பிக் கொடுக்க முடியாது.
திருமலை நாயக்கர் கட்டிக் கொடுத்த கோவிலை நீங்கள் யாரிடம் கொடுப்பீர்கள்? சோழ மன்னர்கள் கட்டிக் கொடுத்த கோவில்களை யார்ட்ட கொடுப்பீங்க? பாண்டிய மன்னர்கள் கட்டிக்கொடுத்த கோவிலை இன்னிக்கு யார்ட்ட போயிகொடுப்பீர்கள்? அதாவது, இந்த வாதமே ஒரு உணர்ச்சியை தூண்டுவதற்கான, வெறியை ஒரு தூண்டுவதற்கான வார்த்தையே யொழிய இது சரியான தீர்வு அல்ல.
ஏன் இந்த இந்து அறநிலையத்துறையை விட முடியாது என்பதற்கு நான் சொல்லும் முக்கியமான காரணம், நம்மளுக்கு எவ்வளவு நிலம் இருக்கு அப்படீங்கறத ஒழுங்குபடுத்துவதற்கு தனிமனிதரால முடியாது. ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் இப்ப திருவண்ணாமலை இருக்கிறேன். திருவண்ணாமலை தீபத்துக்கு வந்துட்டுப் போனவங்களோட எண்ணிக்கை எவ்வளவுன்னு கேட்டேன். 37 லட்சம் பேர்.
37 லட்சம் பேர் ஒரு ஊருக்கு வந்துட்டுப் போறாங்க அப்படீன்னு சொன்னா, அந்த ஊர் மாநகராட்சி என்ன கஷ்டப்படும், அந்த மாவட்ட கலெக்டர் எவ்வளவு காரியங்கள் செய்யணும்? இப்படி கேட்கிறேன். கோவில் தனியார்ட்ட காவல் துறை அதிகாரி என்ன நான் ஈ.சி. ஆக்டை முன்மொழிந்து, வலிமையாக கொண்டுவந்தவர்.
சொல்லப் போனால் நாத்திகர் ஓமந்தூர் இராமசாமி இது தெரியும்? இருந்தா இதெல்லாம் நடக்குமா? சுமார் 40 லட்சம்பேர் வந்துவிட்டு, அசம்பாவிதமும் எந்தவித இல்லாம திரும்பிப்போற அந்தப் பொறுப்பை, இந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஏத்துக்கிறார்.
ஏன்னா, இது அரசுகோவில்!. அரசினுடைய பாதுகாப்பில இருக்கு! ஒரு தனியார் இப்படிப் போயி ஒரு காரியத்தை பண்ண முடியுமா? யாராவது செய்ய முடியுமா, சார்? பிளைனா சொல்றதாஇருந்தா, ஏதாவது ஒரு இஷ்யூவை வச்சு சண்டை போடணும்னு நெனக்கிறவங்க போடலாமே யொழிய, ஐம்பது ஆண்டு கால இந்து அறநிலையத்துறை வரலாறு தெரிந்தவர்களுக்கு இதன் அர்த்தம் தெரியும்” இவ்வாறு ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேட்டியின் போது தெரிவித்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?