Tamilnadu
74-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!
நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர். தமிழ்நாட்டில் சென்னை மெரினாவில் தேசியக் கொடியைத் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார்.
முன்னதாக ராணுவ அணிவகுப்புடன் நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
பின்னர் முப்படை அதிகாரிகளை ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். பிறகு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது மற்றும் வேளாண்மைத் துறையின் சிறப்பு விருதுகளை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற வரும் பள்ளி - கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டு வருகின்றனர். இதையடுத்து தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணி வகுத்து சென்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!