Tamilnadu
தொடர் குடைச்சல்.. “எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி..” - கண்ணீர் பதிவு வெளியிட்ட காயத்ரி ரகுராம் !
தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஊரே நாறும் அளவிற்கு பா.ஜ.கவின் உட்கட்சி பூசல் வெளியே வந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களும் வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.
கே.டி.ராகவன் தொடங்கி, திருச்சி சூர்யா வரை பா.ஜ.க முக்கிய புள்ளிகள் மீது சொந்தக் கட்சி பெண் நிர்வாகிகளே புகார் அளித்துள்ள செய்திகள் எல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து பா.ஜ.க நாறிக் கிடக்கிறது. இது எல்லாம் ஒரு கட்சியா? என்று பெண்களே பேசும் அளவிற்குத் தமிழ்நாட்டு பா.ஜ.க உள்ளது.
அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பாஜவின் முன்னாள் காயத்ரி ரகுராம் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் பெண் நிர்வாகி டெய்சியை, திருச்சி சூர்யா அருவருக்கத்தக்க வகையில் பேசியது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக கண்டன குரலையும் காயத்ரி ரகுராம் எழுப்பியிருந்தார்.
இதனால் அவரை 6 மாதங்களுக்கு பாஜகவில் இருந்து இடைநீக்க செய்யப்படுவதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தன்மீது என்ன தவறு உள்ளது என்று தொடர்ந்து கூச்சல் போட்டு வந்த காயத்ரியை, பாஜகவில் இருப்பவர் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனம்நொந்து பாஜகவில் இருந்து மொத்தமாக விலகினார் காயத்ரி.
தொடர்ந்து அண்ணாமலை குறித்தும், தமிழ்நாடு பாஜகவை குறித்தும் உண்மைகளை புட்டு புட்டு வைத்து வருகிறார் காயத்ரி. மேலும் அண்ணாமலை வந்த பிறகே இதுபோன்ற குற்றங்கள் வருவதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதோடு பா.ஜ.கவில் கடந்த ஒரு வருடமாக ஹனிட்ராப் எனும் புதிய விஷயம் வந்துள்ளது. இது ஒரு பெண்ணுக்கு ஆபத்தானது என்றும், துபாய் ஹோட்டலில் நான் ஹனிட்ராப் செய்தேன் என 150 பேருக்கு முன்னால் அண்ணாமலை தவறாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப்பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.
என்னால் திரும்ப கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி.
கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”மணிப்பூர் மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்” : குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!
-
யார் உங்களுக்கு ரூ.5 கோடி பணம் அனுப்பியது? : பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி!
-
"பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது" - திருமாவளவன் விமர்சனம் !
-
”விமானத்தை கண்டுபிடித்தது இவர்தான், ரைட் சகோதரர்கள் அல்ல” : ஆளுநர் ஆனந்திபென் படேல் பேச்சு!
-
கோவையில் மகளிர் கட்டணமில்லாப் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக வதந்தி : அம்பலமான தினமலரின் பொய் செய்தி !