Tamilnadu
கலைத்திருவிழாவில் முதல்வருக்கு பரிசாக அளிக்க உள்ள நூல் இதுதான்: அமைச்சர் அன்பில் குறிப்பிடும் நூல் என்ன?
அ. ராஜா தமிழ்மாறன் எழுதிய "தமிழன் வழிபாடு" நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்றது. இதில் "தமிழன் வழிபாடு" நூலினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கனிமொழி சோமு, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் - சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், கலைஞர் செய்திகள் ஆசிரியர் ப. திருமாவேலன், தி.மு.க மாணவரணி மாநிலத் தலைவர் ராஜீவ்காந்தி, தென்னிந்திய கோவில்கள் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, ஜெர்மனியை சேர்ந்த தமிழர் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, " அன்பில் கிராமத்தில் கிடைத்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் அவர்கள் சொன்னார்கள். சோழர்களின் வாரிசு அமைப்பு அதில் தான் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்கள். அந்த வகையில் சோழ மண்ணில் இருந்து வந்த முத்துவேலர் வாரிசு, முத்தமிழ் அறிஞர் வாரிசு, தளபதி அவர்களின் வாரிசு வரை அன்பில் குடும்பம் பக்கபலமாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.
அனைவருக்கும் தமிழும் அறிவும் கிடைக்க வேண்டும் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சீரமைக்கப்பட்ட இந்த அரங்கில் "தமிழன் வழிபாடு' என்ற இந்த புத்தகம் வெளியிடப்படுவது மகிழ்ச்சி. இதுபோன்ற புத்தகங்கள் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் சென்றுசேர வேண்டும் என்கிற காலகட்டம் இது. எதற்காக இதனை சொல்கிறேன் என்று உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்.
பெரியார் அவர்களை பொறுத்தவரை எதையும் - யாரையும் புனிதம் என்று சொல்லக்கூடாது என்பார். நம்முடைய குலதெய்வங்களுக்கு நாம் என்ன சாப்பிட்டோமோ, அதைத் தான் படைத்தோம். அந்த சாமிகளிடம் உரிமையோடு கோபித்துக் கொள்வோம்; சண்டையிட்டுக் கொள்வோம். மற்ற தெய்வங்களிடம் என்று எடுத்துக் கொண்டால், ஏதாவது சபித்து விடுவார்களோ என்ற பயம் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் கருப்பண்ண சாமி, முனியாண்டி ஆகிய சாமிகளை நம்முடைய குடும்பத்தில் ஒருத்தராக நினைத்து வழிபடுகிறோம். அப்படிப்பட்ட கடவுள்களுக்கும், ஊர்களுக்கும் இருந்த தமிழ் பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டு உள்ளதை இங்குள்ளவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இன்றைக்கு தாமிரபரணியை பொருநை என்றே அழைக்கலாம் என நீதிமன்றம் சொல்லி உள்ளது. அதேபோல நம்முடைய ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து சொல்லுங்கள்,
தமிழ் பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கும் ஊர்களுக்கு மீண்டும் அதே பெயரை வைக்க துறைசார்ந்த அமைச்சருடன் பேசி முடிவு காண்போம். அதையெல்லாம் நிறைவேற்றிட உதவும் ஆட்சி தான் இங்கு நடந்து கொண்டு இருக்கிறது.
எங்களுடைய குலதெய்வம் பெரியண்ணன் சாமி. நான் கூட நினைத்துப் பார்ப்பேன், பெரியார் அவர்கள் மீதும், பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும் எங்கள் தாத்தா அன்பிலார் கொண்டிருந்த பாசம் காரணமாகதான், பெரியண்ணன் சாமி என்ற குல தெய்வம் வந்துவிட்டதோ என்று..!
பௌத்தம், சமணம் ஆகியவற்றையும் சார்ந்தே நம்முடைய வழிபாட்டு முறைகள் இருந்துள்ளன. அவற்றின் கூறுகளை இன்றைக்கும் நம்மால் பல இடங்களில் காண முடியும். நம்முடைய ஊர்களின் பெயர்களில் இருந்தே நம்முடைய வழிபாட்டு முறையை, பண்பாட்டை, கலாச்சார முறையை தெரிந்து கொள்ளலாம்.
மனித தன்மையை மீறிய ஒரு வழிபாட்டு முறை இருந்தது என்றால், அதைப் பார்த்து ஆச்சரியப்படலாம். ஆனால் பயந்து அதனை வழிபாட்டுக்கு உரியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வழிபாட்டு உரிமை என்று இருக்கிறது. நம்முடைய நிலம் சார்ந்து, நம்முடைய மொழி சார்ந்து, எந்த கடவுளை எந்த முறையில் வழிபட வேண்டும் எனபதை நாம் தான் உருவாக்கிக்
திராவிட மாடல் புத்தகத்தில் முதலமைச்சர் அவர்கள் சொல்கிறார், இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்; அதுதான் எங்கள் இலக்கு என்று. ஆக அந்த சமத்துவத்திற்கு பாதிப்பு வராத வகையில் நம்முடைய வழிபாடு இருக்க வேண்டும் என்று சொன்னால், அது நம்முடைய முன்னோர்கள், மூதாதையர்களின் வழிபாடாக தான் இருக்க முடியும் என்று ஆணித்தரமாக நம்புவோம்.
"தமிழன் வழிபாடு" என்ற இந்த நூலை எழுதி நமக்கு அளித்துள்ள நண்பருக்கு நான் அளிக்கும் பரிசு என்பது, நாளை கலைத்திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் அன்பு பரிசாக அளிக்க இருக்கும் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?