Tamilnadu
“பொய் பேசிய DR ஷர்மிகா.. இனி மருத்துவர் என்றே சொல்லமுடியாது..” - மருத்துவத்துறை இயக்குநர் அதிரடி !
பா.ஜ.க.வின் மாநில நிர்வாகியாக இருப்பவர் டெய்சி. இவர் அண்மையில் திருச்சி சூர்யாவின் ஆடியோ சர்ச்சையில் சிக்கினார். அவ்வளவு கேவலமாக சூர்யா பேசியும் கூட "நாங்கள் அக்கா - தம்பி போன்றவர்கள்" என்று பேட்டியளித்தார். இதற்காகவே நெட்டிசன்கள் இவரை கிண்டலடித்து வந்தனர்.
இவருக்கு ஷர்மிகா என்ற மகள் உள்ளார். சித்த மருத்துவம் படித்த இவர், பிரபல யூடியூப் சேனலுக்கு மருத்துவ குறிப்புகள் வழங்கி வருவார். உடல் உபாதைகள், இதை சாப்பிடலாம் - இதை சாப்பிடக்கூடாது என்று டிப்ஸ் வழங்கி வருவார்.இப்படி மருத்துவர் என்ற போர்வைக்குள் இருந்து யூடியூப் சேனல் மூலம் மறைமுக மத பிரச்சாரத்தை செய்வதாக ஷர்மிகாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஏனெனில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் மாட்டுக்கறி, கோழிக்கறி உட்பட அனைத்தையும் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.
அதாவது அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மாட்டுக்கறி என்பது நாம் கடவுளாக பார்க்கும் ஒரு அழகான விஷயம். அதையும் மீறி சொல்ல வேண்டுமானால், இந்திய மக்கள் DNA-விலே தங்களை விட பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் ஆகக்கூடிய சக்தி இல்லை. ஆடு, கோழி, கெளதாரி என நம்மை விட சிறிய மிருகங்களை சாப்பிட்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் பிரச்னை ஏற்படும்" என்றார்.
தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "எடை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு, 3 கிலோ எடை குறைந்தால் கூட, பின்னர் ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் அதே 3 கிலோ எடை ஒரே நாளில் ஏறும்" என்றார். இதனைத் தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்த கூடாது; பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சிறந்தது. எனவே அதனை சாப்பிடுவதில் கவனம் வேண்டும்" என்றார். மேலும் "குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக மாறும், தினசரி 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் அழகாகும், ஷாம்பூ தான் முடிக்கு விஷம்.." என்று பல விதமான கருத்துக்களையும் வாரி வழங்கி வருகிறார் ஷர்மிகா.
தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் கன்டென்டாக இருக்கும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஒரு டாக்டரை ட்ரோல் செய்வதற்கு முன் யோசிங்கப்பா கொஞ்சம். யாரை பேசுகிறீர்கள்? ஒரு ராணுவ வீரரை போன்றுதான் மருத்துவரும். நாட்டுக்கு சேவை செய்பவர்கள். நான் ஒரு சித்த மருத்துவர். நீங்கள் டாக்டரையே இல்லை என்கிறார்கள். நான் படித்து வந்துள்ளேன் என்ன பேச வேண்டும் என்று தெரியும். மருத்துவர்களை விமர்சிப்பதால், அவர்களை தொந்தரவு செய்தால் தண்டிப்பதற்கான சட்டங்களும் உள்ளன. எங்கள் சித்த மருத்துவர்கள் சேர்ந்ததால் என்ன ஆகும் தெரியுமா?" என்று பேசியுள்ளார்.
முன்னதாக இவர் அள்ளிவிட்ட பொய்கள் குறித்து தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கூறுகையில், "ஷர்மிகா ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக, சமூக ஊடகங்களில் கருத்துகள் சொல்ல எந்த தடையும் இல்லை. ஆனால் மருத்துவ விதிகளின் படி தவறான கருத்தை பரப்பக் கூடாது.
அதுவும் சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி இல்லை எனவும் எந்த இறைச்சியும் சாப்பிக் கூடாது என்று குறிப்பிடவில்லை. யாருக்கு சத்தான உணவு தேவைபடுகிறதோ அது சைவம் ஆனாலும் சரி, அசைவம் ஆனாலும் சரி அவர்கள் விருப்பம் படி சாப்பிடலாம். மேலும் ஷர்மிகா சொல்வது போன்ற எந்த ஆதாரமும் இல்லை. தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இதுபோல பேசுகிறார்.ஒரு மருத்துவர் மருத்துவரீதியான கருத்துகளை மட்டுமே மக்களிடையே சொல்லவேண்டும். மருத்துவத்திற்கு அப்பாற்றப்பட்டு சொல்லக்கூடாது. மக்களிடம் தவறான கருத்து கூறிய சித்த மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ் ஷர்மிகாவின் மேல் தவறு நிரூபிக்கப்பட்டார் அவரின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்படும் என கூறியுள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பேசியுள்ள அவர், "சித்த மருத்துவர் ஷர்மிகா மக்களை தவறாக வழிநடத்துவதால்தான், தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதற்காக, சித்த மருத்துவர் உள்ளடக்கிய மருத்துவ வல்லூநர்கள் கொண்ட குழுவையும் நியமித்துள்ளோம். அக்குழுவினர் சித்த மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளுக்கு எதிராக ஷர்மிகா என்னென்ன பேசியுள்ளார்? விதிமீறல் செய்துள்ளாரா? என்பதையெல்லாம் ஆராய்ந்து, ஷர்மிகாவின் விளக்கத்தையும் கேட்டு எனக்கு ரிப்போர்ட் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை என்பது குறித்து முடிவு செய்வோம்.
மருத்துவ வல்லுநர் குழுவின் ரிப்போர்ட் வந்தபிறகு, ஷர்மிகா கவுன்சிலின் விதிகளை மீறியுள்ளாரா? என்பதை ஆராய்ந்து தற்காலிகமாக அவரது பதிவு எண்ணைக் கேன்சல் செய்வோம். அது ஆறு மாதமா, ஒரு வருடமா என்பதெல்லாம் வல்லுநர் குழு முடிவு செய்யும்" என்றார். அதாவது, டாக்டர் ஷர்மிகாவின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டால், அந்த காலக்கட்டத்தில் தன்னை மருத்துவர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு சிகிச்சையோ ஆலோசனையோ வழங்கமுடியாது" எனக் கூறியுள்ளார். .
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!